1 | அதிகாலமே யோசுவா எழுந்திருந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான்மட்டும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள். | ஆதி 22:3 சங் 119:60 எரே 7:13 எரே 25:3 எரே 26:5 மாற் 1:35 |
2 | மூன்றுநாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய், | யோசு 1:10 யோசு 1:11 |
3 | ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள். | எண் 10:33 |
4 | உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள். | யாத் 3:5 யாத் 19:12 சங் 89:7 எபிரெ 12:28 எபிரெ 12:29 |
5 | யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். | யோசு 7:13 யாத் 19:10-15 லேவி 10:3 லேவி 20:7 எண் 11:8 1சாமு 16:5 யோபு 1:5 யோவே 2:16 யோவா 17:19 |
6 | பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள். | யோசு 3:3 எண் 14:15 எண் 10:33 மீகா 2:13 யோவா 14:2 யோவா 14:3 எபிரெ 6:20 |
7 | கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். | யோசு 4:14 1நாளா 29:25 2நாளா 1:1 யோபு 7:17 சங் 18:35 யோவா 17:1 பிலிப் 1:20 பிலிப் 2:9-11 |
8 | உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். | யோசு 3:3 1நாளா 15:11 1நாளா 15:12 2நாளா 17:8 2நாளா 17:9 2நாளா 29:4-11 2நாளா 29:15-11 2நாளா 29:27-11 2நாளா 29:30-11 2நாளா 30:12 2நாளா 31:9 2நாளா 31:10 2நாளா 35:2-6 நெகே 12:24-28 நெகே 13:22 நெகே 13:28 |
9 | யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான். | உபா 4:1 உபா 12:8 |
10 | பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும். ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: | எண் 15:28-30 1இரா 18:36 1இரா 18:37 1இரா 22:28 சங் 9:16 ஏசா 7:14 2கொரி 13:2 2கொரி 13:3 |
11 | இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது. | யோசு 3:13 சங் 24:1 ஏசா 54:5 எரே 10:7 மீகா 4:13 செப் 2:11 சகரி 4:14 சகரி 6:5 சகரி 14:9 |
12 | இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள். | யோசு 4:2 யோசு 4:9 |
13 | சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான். | யோசு 3:15 யோசு 3:16 யாத் 14:19-22 |
14 | ஜனங்கள் யோர்தானைக் கடந்து போகத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள். | யோசு 3:3 யோசு 3:6 யோசு 6:6 உபா 31:26 எரே 3:16 அப் 7:44 அப் 7:45 1கொரி 1:24 1கொரி 1:25 எபிரெ 9:4 |
15 | யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோகும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, | யோசு 3:13 ஏசா 26:6 |
16 | மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள். | யோசு 3:13 சங் 29:10 சங் 77:19 சங் 114:3 மத் 8:26 மத் 8:27 மத் 14:24-33 |
17 | சகல ஜனங்களும் யோர்தானைக் கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்துபோனார்கள். | யோசு 4:3 2இரா 2:8 |