இணை வசன வேதாகமம்

யோசுவா 15

                   
புத்தகங்களைக் காட்டு
1யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.யோசு 14:2 எண் 26:55 எண் 26:56
2தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி,யோசு 3:16 ஆதி 14:3 எண் 34:3 எசே 47:8 எசே 47:18
3தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய்,எண் 34:4 நியா 1:36
4அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல் மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.எண் 34:5
5கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனைதுவக்கி,எண் 34:12
6பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,யோசு 18:19 யோசு 18:20
7அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,யோசு 15:15 யோசு 10:38 யோசு 10:39
8அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,யோசு 18:16 2இரா 23:10 2நாளா 28:3 எரே 7:31 எரே 7:32 எரே 19:2 எரே 19:6 எரே 19:14
9அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,யோசு 18:15
10பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,1சாமு 6:12-21
11அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.யோசு 15:45 யோசு 19:43 1சாமு 5:10 1சாமு 7:14 2இரா 1:2 2இரா 1:3 2இரா 1:6 2இரா 1:16
12மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.யோசு 15:47 எண் 34:6 எண் 34:7 உபா 11:24 எசே 47:20
13எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான்.யோசு 14:6-15 எண் 13:30 எண் 14:23 எண் 14:24 உபா 1:34-36
14அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,யோசு 10:36 யோசு 10:37 யோசு 11:21 எண் 13:22 எண் 13:23 நியா 1:10 நியா 1:20
15அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.யோசு 10:3 யோசு 10:38 நியா 1:11-13
16கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.நியா 1:6 நியா 1:12 நியா 1:13
17அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.நியா 1:13 நியா 3:9 நியா 3:11
18அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.ஆதி 24:64 1சாமு 25:23
19அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.நியா 1:14 நியா 1:15
20யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:ஆதி 49:8-12 உபா 33:7
21கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,நெகே 11:25
22கீனா. திமோனா, ஆதாதா,
23கேதேஸ், ஆத்சோர், இத்னான்,யோசு 12:22 எண் 33:37 உபா 1:19
24சீப், தேலெம், பெயாலோத்,1சாமு 23:14 1சாமு 23:19 1சாமு 23:24 சங் 54:1
25ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
26ஆமாம், சேமா, மொலாதா,1நாளா 4:28
27ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத்,நெகே 11:26
28ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,யோசு 19:3 1நாளா 4:28
29பாலா, ஈயிம், ஆத்சேம்,யோசு 15:9-11 யோசு 19:3
30எல்தோலாத், கெசீல், ஒர்மா,யோசு 19:4 எண் 14:45 உபா 1:44 நியா 1:17
31சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,யோசு 19:5 1சாமு 27:6 1சாமு 30:1 1நாளா 12:1
32லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.எண் 34:11
33பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,யோசு 19:41 எண் 13:23 நியா 13:25 நியா 16:31
34சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,யோசு 15:53 யோசு 12:17
35யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,யோசு 10:3 யோசு 10:23 யோசு 12:11 நெகே 11:29
36சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினான்கு.1சாமு 17:52
37சேனான், அதாஷா, மிக்தால்காத்,
38திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,ஆதி 31:48 ஆதி 31:49 நியா 20:1 நியா 21:5 1சாமு 7:5 1சாமு 7:6 1சாமு 7:16 1சாமு 10:17
39லாகீஸ், போஸ்காத், எக்லோன்,யோசு 10:3 யோசு 10:31 யோசு 10:32 யோசு 12:11 2இரா 18:14 2இரா 18:17 2இரா 19:8
40காபோன், லகமாம், கித்லீஷ்,
41கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.யோசு 10:21 யோசு 10:28 யோசு 12:16
42லிப்னா, ஏத்தேர், ஆஷான்,யோசு 10:29 யோசு 12:15 2இரா 8:22
43இப்தா, அஸ்னா, நெத்சீப்,
44கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.1சாமு 23:1-14
45எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,யோசு 13:3 1சாமு 5:10 1சாமு 6:17 ஆமோ 1:8 செப் 2:4 சகரி 9:5-7
46எக்ரோன் துவக்கிச் சமுத்திரம் மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,1சாமு 5:1 1சாமு 5:6 2நாளா 26:6 நெகே 13:23 நெகே 13:24 ஏசா 20:1 ஆமோ 1:8
47அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.நியா 16:1-21 எரே 47:1 எரே 47:5 ஆமோ 1:6 ஆமோ 1:7 செப் 2:4 அப் 8:26
48மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,யோசு 21:14
49தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,யோசு 15:15 நியா 1:11
50ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
51கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.யோசு 10:41 யோசு 11:16
52அராப், தூமா, எஷியான்,ஏசா 21:11
53யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
54உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.யோசு 15:13 யோசு 14:15 ஆதி 23:2
55மாகோன், கர்மேல், சீப், யுத்தா,1சாமு 23:25 1சாமு 25:2 1சாமு 25:7 2நாளா 26:10 ஏசா 35:2
56யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
57காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.யோசு 15:10 ஆதி 38:12 எரே 14:1
58அல்கூல், பெத்சூர், கெதோர்,1நாளா 4:39
59மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
60கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.யோசு 18:14 1சாமு 7:1
61வனாந்தரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா,யோசு 15:6 யோசு 18:18
62நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.1சாமு 23:29 2நாளா 20:2
63எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.நியா 1:8 நியா 1:21 2சாமு 5:6-9 1நாளா 11:4-8 ரோம 7:14-21

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.