இணை வசன வேதாகமம்

யோசுவா 12

                   
புத்தகங்களைக் காட்டு
1யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.யோசு 1:15 யோசு 22:4
2அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,எண் 21:23-30 உபா 2:24-37 உபா 3:6-17 நெகே 9:22 சங் 135:11 சங் 136:19 சங் 136:20
3சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல் மட்டும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.யோசு 11:2 உபா 3:17 யோவா 6:1
4இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,எண் 21:33-35 உபா 3:1-7 உபா 3:10-7
5எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆண்டான்.யோசு 12:1 யோசு 11:3 உபா 3:8 உபா 3:9 உபா 4:47 உபா 4:48
6அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.எண் 21:24-35
7யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,யோசு 12:1 யோசு 3:17 யோசு 9:1
8யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:யோசு 10:40 யோசு 11:16
9எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,யோசு 6:2-21
10எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,யோசு 10:23
11யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,யோசு 10:3-23
12எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,யோசு 10:3 யோசு 10:23 யோசு 15:39
13தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,யோசு 10:3 யோசு 10:38
14ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,எண் 14:45 எண் 21:3
15லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,யோசு 10:29 யோசு 10:30
16மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,யோசு 10:28
17தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,யோசு 15:34
18ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,யோசு 19:30 1சாமு 4:1
19மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,யோசு 11:1
20சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,யோசு 11:1 யோசு 19:15
21தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,யோசு 17:11 நியா 5:19
22கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,யோசு 15:23 யோசு 19:37 யோசு 21:32
23தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,யோசு 11:2 யோசு 17:11
24திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.1இரா 16:23 2இரா 15:14

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.