1 | அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி: | எண் 1:1 யாத் 40:2 |
2 | குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள். | யாத் 12:1-20 |
3 | இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார். | 2நாளா 30:2 2நாளா 30:15 |
4 | அப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான். |
5 | அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள். | யோசு 5:10 |
6 | அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து: | எண் 5:2 எண் 6:6 எண் 6:7 எண் 19:11 எண் 19:16 எண் 19:18 லேவி 21:11 யோவா 18:28 |
7 | நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள். | எண் 9:2 யாத் 12:27 உபா 16:2 2நாளா 30:17-19 1கொரி 5:7 1கொரி 5:8 |
8 | மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான். | யாத் 14:13 2நாளா 20:17 |
9 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
10 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும். | எண் 9:6 எண் 9:7 ரோம 15:8-19 ரோம 16:25 ரோம 16:26 1கொரி 6:9-11 எபே 2:1 எபே 2:2 எபே 2:12 எபே 2:13 எபே 3:6-9 |
11 | அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து, | எண் 9:3 யாத் 12:2-14 யாத் 12:43-49 2நாளா 30:2-15 யோவா 19:36 |
12 | விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள். | யாத் 12:10 |
13 | ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான். | எண் 15:30 எண் 15:31 எண் 19:13 ஆதி 17:14 யாத் 12:15 லேவி 17:4 லேவி 17:10 லேவி 17:14-16 எபிரெ 2:3 எபிரெ 6:6 எபிரெ 10:26-29 எபிரெ 12:25 |
14 | ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார். | யாத் 12:48 யாத் 12:49 லேவி 19:10 லேவி 22:25 லேவி 24:22 லேவி 25:15 உபா 29:11 உபா 31:12 ஏசா 56:3-7 எபே 2:19-22 |
15 | வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது. | யாத் 40:2 யாத் 40:18 |
16 | இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது. | எண் 9:18-22 யாத் 13:21 யாத் 13:22 யாத் 40:38 உபா 1:33 நெகே 9:12 நெகே 9:19 சங் 78:14 சங் 105:39 ஏசா 4:5 ஏசா 4:6 1கொரி 10:1 2கொரி 5:19 வெளிப் 21:3 |
17 | மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள். | எண் 10:11 எண் 10:33 எண் 10:34 யாத் 40:36-38 சங் 80:1 சங் 80:2 ஏசா 49:10 யோவா 10:3-5 யோவா 10:9-5 |
18 | கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள். | எண் 9:20 எண் 10:13 யாத் 17:1 2யோவா 1:6 |
19 | மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள். | எண் 1:52 எண் 1:53 எண் 3:8 சகரி 3:7 |
20 | மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள். |
21 | மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிராயணப்படுவார்கள். | நெகே 9:12 நெகே 9:19 |
22 | மேகமானது இரண்டு நாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள். | எண் 9:17 எண் 1:54 எண் 8:20 எண் 23:21 எண் 23:22 யாத் 39:42 யாத் 40:16 யாத் 40:36 யாத் 40:37 உபா 1:6 உபா 1:7 உபா 2:3 உபா 2:4 சங் 32:8 சங் 48:14 சங் 73:24 சங் 77:20 சங் 107:7 சங் 143:10 நீதி 3:5 நீதி 3:6 அப் 1:4 |
23 | கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள். | எண் 9:19 ஆதி 26:5 யோசு 22:3 எசே 44:8 சகரி 3:7 |