1 | மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில், | யாத் 40:17-19 |
2 | தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள். | எண் 1:4-16 எண் 2:1-34 எண் 10:1-36 |
3 | தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். |
4 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: |
5 | நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி. லேவியருக்கு அவரவர் வேலைக்குத் தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார். | யாத் 25:1-11 யாத் 35:4-10 சங் 16:2 சங் 16:3 ஏசா 42:1-7 ஏசா 49:1-8 எபே 4:11-13 தீத் 3:8 |
6 | அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான். |
7 | இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான். | எண் 3:25 எண் 3:26 எண் 4:24-28 |
8 | நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான். | எண் 3:36 எண் 3:37 எண் 4:28-33 |
9 | கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது. | எண் 3:31 எண் 4:4-16 2சாமு 6:6 2சாமு 6:13 1நாளா 15:3 1நாளா 15:13 1நாளா 23:26 |
10 | பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். | உபா 20:5 1இரா 8:63 2நாளா 7:5 2நாளா 7:9 எஸ்றா 6:16 எஸ்றா 6:17 நெகே 12:27 நெகே 12:43 சங் 30:1 |
11 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார். | 1கொரி 14:33 1கொரி 14:40 கொலோ 2:5 |
12 | அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன். | எண் 1:7 எண் 2:3 எண் 10:14 ஆதி 49:8 ஆதி 49:10 ரூத் 4:20 மத் 1:4 லூக் 3:32 |
13 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், | யாத் 25:29 யாத் 37:16 1இரா 7:43 1இரா 7:45 2இரா 25:14 2இரா 25:15 எஸ்றா 1:9 எஸ்றா 1:10 எஸ்றா 8:25 எரே 52:19 தானி 5:2 சகரி 14:20 மத் 14:8 மத் 14:11 |
14 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், | எண் 4:7 யாத் 37:16 1இரா 7:50 2இரா 25:14 2இரா 25:15 2நாளா 4:22 2நாளா 24:14 |
15 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், | எண் 25:1-18 எண் 28:1-29 லேவி 1:1-17 ஏசா 53:4 ஏசா 53:10 ஏசா 53:11 மத் 20:28 யோவா 17:19 ரோம 3:24-26 ரோம 5:6-11 ரோம 5:16-21 ரோம 8:34 ரோம 10:4 1தீமோ 2:6 தீத் 2:14 எபிரெ 2:10 1பேது 1:18 1பேது 1:19 1பேது 2:24 1பேது 3:18 |
16 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், | லேவி 4:23 லேவி 4:25 |
17 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய நகசோனின் காணிக்கை. | லேவி 3:1-17 2கொரி 5:19-21 |
18 | இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் குமாரன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான். | எண் 1:8 எண் 2:5 |
19 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு, எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், |
20 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், |
21 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், | ஆதி 8:20 ரோம 12:1 எபே 5:2 |
22 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
23 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய நெதனெயேலின் காணிக்கை. | லேவி 7:11-13 1இரா 8:63 நீதி 7:14 கொலோ 1:1 |
24 | மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். | எண் 1:9 எண் 2:7 |
25 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், |
26 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், |
27 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், | சங் 50:8-14 சங் 51:16 ஏசா 1:11 எரே 7:22 ஆமோ 5:22 |
28 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
29 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும் ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின் குமாரனாகிய எலியாபின் காணிக்கை. |
30 | நான்காம் நாளில் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். | எண் 1:5 எண் 2:10 |
31 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், |
32 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், | சங் 66:15 மல்கி 1:11 லூக் 1:10 வெளிப் 8:3 |
33 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், |
34 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
35 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்காடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் குமாரனாகிய எலிசூரின் காணிக்கை. |
36 | ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். | எண் 1:6 எண் 2:12 |
37 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிகலமும் ஆகிய இவ்விரண்டும், |
38 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், |
39 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், | யாத் 12:5 யோவா 1:29 அப் 8:32 1பேது 1:19 வெளிப் 5:6 |
40 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
41 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேலின் காணிக்கை. |
42 | ஆறாம் நாளிலே தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். | எண் 1:14 எண் 2:14 |
43 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், | லேவி 2:5 லேவி 14:10 எபிரெ 1:9 1யோவா 2:27 |
44 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், |
45 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், | சங் 66:15 ஏசா 53:4 2கொரி 5:21 |
46 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
47 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் குமாரனாகிய எலியாசாபின் காணிக்கை. |
48 | ஏழாம் நாளில் அம்மீயூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். | எண் 1:10 எண் 2:18 |
49 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், |
50 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், |
51 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், |
52 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
53 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமாவின் காணிக்கை. |
54 | எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். | எண் 1:10 எண் 2:20 |
55 | அவன் காணிக்கையாவது: போஜன பலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், |
56 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், |
57 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், |
58 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
59 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் குமாரனாகிய கமாலியேலின் காணிக்கை. |
60 | ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். | எண் 1:11 எண் 2:22 |
61 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், |
62 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், | சங் 112:2 ஏசா 66:20 தானி 9:27 ரோம 15:16 பிலிப் 4:18 எபிரெ 13:15 |
63 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், |
64 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
65 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் குமாரனாகிய அபீதானின் காணிக்கை. |
66 | பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். | எண் 1:12 எண் 2:25 |
67 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், |
68 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், |
69 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், |
70 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
71 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேரின் காணிக்கை. |
72 | பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். | எண் 1:13 எண் 2:27 |
73 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், |
74 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், |
75 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், |
76 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
77 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் குமாரனாகிய பாகியேலின் காணிக்கை. |
78 | பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். | எண் 1:15 எண் 2:29 |
79 | அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், |
80 | தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், |
81 | சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும், |
82 | பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், |
83 | சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய அகீராவின் காணிக்கை. |
84 | பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது: வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு. | எண் 7:10 1நாளா 29:6-8 எஸ்றா 2:68 எஸ்றா 2:69 நெகே 7:70-72 ஏசா 60:6-10 எபிரெ 13:10 வெளிப் 21:14 |
85 | ஒவ்வொரு வெள்ளித்தாலம் நூற்று முப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையாயிருந்தது. | 1நாளா 22:14 1நாளா 29:4 1நாளா 29:7 எஸ்றா 8:25 எஸ்றா 8:26 |
86 | தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூப கரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது. |
87 | சர்வாங்கதகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒருவயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும் கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு. |
88 | சமாதானபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக் கடாக்கள் அறுபது; ஒருவயதான ஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே. | எண் 7:1 எண் 7:10 எண் 7:84 |
89 | மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார். | எண் 12:8 யாத் 33:9-11 |