1 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
2 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப்பண்ணினால், | எண் 6:5 எண் 6:6 யாத் 33:16 லேவி 20:26 நீதி 18:1 ரோம 1:1 2கொரி 6:16 கலா 1:15 எபிரெ 7:27 |
3 | அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்சவற்றல்களையாவது புசியாமலும், | லேவி 10:9 நியா 13:14 நீதி 31:4 நீதி 31:5 எரே 35:6-8 ஆமோ 2:12 லூக் 1:15 லூக் 7:33 லூக் 7:34 லூக் 21:34 எபே 5:18 1தெச 5:22 1தீமோ 5:23 |
4 | தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன். | எண் 6:5 எண் 6:8 எண் 6:9 எண் 6:12 எண் 6:13 எண் 6:18 எண் 6:19 எண் 6:21 |
5 | அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன். | நியா 13:5 நியா 16:17 நியா 16:19 1சாமு 1:11 புலம் 4:7 புலம் 4:8 1கொரி 11:10-15 |
6 | அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது. | எண் 19:11-16 லேவி 19:28 எரே 16:5 எரே 16:6 எசே 24:16-18 மத் 8:21 மத் 8:22 லூக் 9:59 லூக் 9:60 2கொரி 5:16 |
7 | அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது. | எண் 9:6 லேவி 21:1 லேவி 21:2 லேவி 21:10-12 எசே 44:25 |
8 | அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான். | 2கொரி 6:17 2கொரி 6:18 |
9 | அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு, | எண் 19:14-19 |
10 | எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன். | லேவி 1:14 லேவி 5:7-10 லேவி 9:1-21 லேவி 12:6 லேவி 14:22 லேவி 14:23 லேவி 14:31 லேவி 15:14 லேவி 15:29 ரோம 4:25 யோவா 2:1 யோவா 2:2 |
11 | அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப்பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக. | லேவி 5:8-10 லேவி 14:30 லேவி 14:31 |
12 | அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும். | லேவி 5:6 லேவி 14:24 |
13 | நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து, | அப் 21:26 |
14 | சர்வாங்க தகனபலியாக ஒருவருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒருவருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும், | லேவி 1:10-13 1நாளா 15:26 1நாளா 15:28 1நாளா 15:29 |
15 | ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச் செலுத்தக்கடவன். | லேவி 2:4 லேவி 8:2 லேவி 9:4 யோவா 6:50-59 |
16 | அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரணபலியையும் அவனுடைய சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, |
17 | ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக. |
18 | அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன். | எண் 6:5 எண் 6:9 அப் 18:18 அப் 21:24 அப் 21:26 |
19 | நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து, | லேவி 8:31 1சாமு 2:15 |
20 | அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டக்கடவன்; அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன் திராட்சரசம் குடிக்கலாம். | எண் 5:25 யாத் 29:27 யாத் 29:28 லேவி 9:21 லேவி 10:15 லேவி 23:11 |
21 | பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார். | எண் 5:29 |
22 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
23 | நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது: | ஆதி 14:19 ஆதி 14:20 ஆதி 24:60 ஆதி 27:27-29 ஆதி 28:3 ஆதி 28:4 ஆதி 47:7 ஆதி 47:10 ஆதி 48:20 லேவி 9:22 லேவி 9:23 உபா 10:8 உபா 21:5 உபா 33:1 யோசு 8:33 1நாளா 23:13 லூக் 24:50 லூக் 24:51 ரோம 1:7 1கொரி 1:3 2கொரி 13:14 எபிரெ 7:1 எபிரெ 7:7 எபிரெ 11:20 எபிரெ 11:21 1பேது 1:2 2பேது 1:2 2பேது 1:3 2யோவா 1:3 |
24 | கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். | ரூத் 2:4 சங் 134:3 1கொரி 14:16 எபே 6:24 பிலிப் 4:23 வெளிப் 1:4 வெளிப் 1:5 |
25 | கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். | சங் 21:6 சங் 31:16 சங் 67:1 சங் 80:1-3 சங் 80:7-3 சங் 80:19-3 சங் 119:135 தானி 9:17 |
26 | கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே. | சங் 4:6 சங் 42:5 சங் 89:15 அப் 2:28 |
27 | இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார். | யாத் 3:13-15 யாத் 6:3 யாத் 34:5-7 உபா 28:10 2நாளா 7:14 ஏசா 43:7 எரே 14:9 தானி 9:18 தானி 9:19 மத் 28:19 |