1 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
2 | இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார். | எண் 31:3 எண் 25:17 எண் 25:18 உபா 32:35 நியா 16:24 நியா 16:28-30 சங் 94:1-3 ஏசா 1:24 நாகூ 1:2 லூக் 21:22 ரோம 12:19 ரோம 13:4 1தெச 4:6 எபிரெ 10:30 வெளிப் 6:10 வெளிப் 18:20 வெளிப் 19:2 |
3 | அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள். | யாத் 17:9-13 |
4 | இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான். | லேவி 26:8 நியா 7:2 1சாமு 14:6 |
5 | அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள். |
6 | மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் குமாரன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான். | எண் 25:7-13 |
7 | கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். | உபா 20:13 உபா 20:14 நியா 21:11 1சாமு 27:9 1இரா 11:15 1இரா 11:16 |
8 | அவர்களைக் கொன்றுபோட்டதும் அன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள். | எண் 22:4 யோசு 13:21 யோசு 13:22 |
9 | அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு, | எண் 31:15 எண் 31:16 உபா 20:14 2நாளா 28:5 2நாளா 28:8-10 |
10 | அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து, | யோசு 6:24 1சாமு 30:1 1இரா 9:16 ஏசா 1:7 வெளிப் 18:8 |
11 | தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து, | உபா 20:14 யோசு 8:2 |
12 | சிறைப்பிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும், எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். | எண் 22:1 |
13 | மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள். | ஆதி 14:17 1சாமு 15:12 1சாமு 30:21 |
14 | அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு, | எண் 12:3 யாத் 32:19 யாத் 32:22 லேவி 10:16 1சாமு 15:13 1சாமு 15:14 1இரா 20:42 2இரா 13:19 எபே 4:26 |
15 | அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? | உபா 2:34 உபா 20:13 உபா 20:16-18 யோசு 6:21 யோசு 8:25 யோசு 10:40 யோசு 11:14 1சாமு 15:3 சங் 137:8 சங் 137:9 எரே 48:10 எசே 9:6 |
16 | பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே. | எண் 24:14 எண் 25:1-3 நீதி 23:27 பிரச 7:26 2பேது 2:15 வெளிப் 2:14 |
17 | ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். | நியா 21:11 நியா 21:12 |
18 | ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். | லேவி 25:44 உபா 20:14 உபா 21:10-14 2நாளா 28:8-10 ஏசா 14:2 |
19 | பின்பு நீங்கள் ஏழுநாள் பாளயத்திற்குப் புறம்பே தங்குங்கள்; நரஜீவனைக் கொன்றவர்களும். வெட்டுண்டவர்களைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து, | எண் 5:2 எண் 19:11-22 1நாளா 22:8 |
20 | அந்தப்படியே எல்லா வஸ்திரத்தையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான். | எண் 19:14-16 எண் 19:22-16 ஆதி 35:2 யாத் 19:10 |
21 | ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்: | எண் 30:16 |
22 | அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு, |
23 | அவைகளை அக்கினியிலே போட்டெடுக்கக்கடவீர்கள்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத்தகாதவைகளையெல்லாம் தண்ணீரினால் சுத்தம் பண்ணக்கடவீர்கள். | ஏசா 43:2 சகரி 13:9 மல்கி 2:2 மல்கி 2:3 மத் 3:11 1கொரி 3:13 1பேது 1:7 1பேது 4:12 வெளிப் 3:18 |
24 | ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பீர்கள்; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான். | எண் 19:19 லேவி 11:25 லேவி 14:9 லேவி 15:13 |
25 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
26 | பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய பிதாக்களாகிய தலைவரும் தொகை பார்த்து, |
27 | கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள். | யோசு 22:8 1சாமு 30:4 1சாமு 30:24 1சாமு 30:25 சங் 68:12 |
28 | மேலும் யுத்தத்திற்குப் போன படைவீரரிடத்தில் கர்த்தருக்காக மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி வீதமாக பகுதி வாங்கி, | ஆதி 14:20 யோசு 6:19 யோசு 6:24 2சாமு 8:11 2சாமு 8:12 1நாளா 18:11 1நாளா 26:26 1நாளா 26:27 நீதி 3:9 நீதி 3:10 ஏசா 18:7 ஏசா 23:18 ஏசா 60:9 மத் 22:21 |
29 | அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்கு கொடுக்கவேண்டும். | எண் 18:26 யாத் 29:27 உபா 12:12 உபா 12:19 |
30 | இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி, அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும் என்றார். | எண் 31:28 எண் 18:24-28 1கொரி 9:13 1கொரி 9:14 |
31 | கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள். |
32 | படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும், |
33 | எழுபத்தீராயிரம் மாடுகளும், |
34 | அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது. |
35 | புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள். |
36 | யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு. |
37 | இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து. |
38 | மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு. |
39 | கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று. |
40 | நரஜீவன்கள் பதினாறாயிரம்பேர்; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர். |
41 | கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே. ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான். | எண் 31:29-31 எண் 18:8 எண் 18:19 மத் 10:10 1கொரி 9:10-14 கலா 6:6 1தீமோ 5:17 எபிரெ 7:4-6 எபிரெ 7:9-12 |
42 | யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது: |
43 | ஆடுகளில் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு, |
44 | மாடுகளில் முப்பத்தாறாயிரம், |
45 | கழுதைகளில் முப்பதினாயிரத்து ஐந்நூறு, |
46 | நரஜீவன்களில் பதினாயிரம்பேருமே. |
47 | இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக, எடுத்து அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான். | எண் 18:21-24 உபா 12:17-19 லூக் 10:1-8 1தெச 5:12 1தெச 5:13 |
48 | பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில் வந்து, |
49 | உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகை பார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை. | 1சாமு 30:18 1சாமு 30:19 சங் 72:14 யோவா 18:9 |
50 | ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள். | சங் 107:15 சங் 107:21 சங் 107:22 சங் 116:12 சங் 116:17 |
51 | அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள். | எண் 7:2-6 |
52 | இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது. |
53 | யுத்தத்திற்குப் போன மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காக் கொள்ளையிட்டிருந்தார்கள். | உபா 20:14 |
54 | அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம் பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறு பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள். | எண் 16:40 யாத் 30:16 யோசு 4:7 சங் 18:49 சங் 103:1 சங் 103:2 சங் 115:1 சங் 145:7 சகரி 6:14 லூக் 22:19 அப் 10:4 |