1 | இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: | எண் 10:11 எண் 10:12 யாத் 19:1 லேவி 27:34 |
2 | நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள். | எண் 26:2-4 எண் 26:63-4 எண் 26:64-4 யாத் 30:12 யாத் 38:26 2சாமு 24:1-3 1நாளா 21:1 1நாளா 21:2 1நாளா 27:23 1நாளா 27:24 |
3 | இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக. | எண் 14:29 எண் 32:11 யாத் 30:14 |
4 | ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும். | எண் 1:16 எண் 2:3-31 எண் 7:10-83 எண் 10:14-27 எண் 13:2-15 எண் 17:3 எண் 25:4 எண் 25:14 எண் 34:18-28 யாத் 18:25 யோசு 22:14 1நாளா 27:1-22 |
5 | உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர். | எண் 2:10 எண் 7:30 எண் 10:18 ஆதி 29:32-35 ஆதி 30:5-20 ஆதி 35:17-26 ஆதி 46:8-24 ஆதி 49:1-33 யாத் 1:2-5 உபா 33:1-29 வெளிப் 7:4-8 |
6 | சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல். | எண் 2:12 எண் 7:36 |
7 | யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன். | எண் 2:3 எண் 7:12 எண் 10:14 ரூத் 4:18 1நாளா 2:10 1நாளா 2:11 மத் 1:2-5 லூக் 3:32 |
8 | இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல். | எண் 2:5 எண் 7:18 எண் 10:15 |
9 | செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப். | எண் 2:7 எண் 7:24 எண் 10:16 |
10 | யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல். | எண் 2:18 எண் 7:48 எண் 10:22 1நாளா 7:26 1நாளா 7:27 |
11 | பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான். | எண் 2:22 எண் 7:60 எண் 10:24 |
12 | தாண் கோத்திரத்தில் அம்மீஷதாயின் குமாரன் அகியேசேர். | எண் 2:25 எண் 7:66 எண் 10:25 |
13 | ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல். | எண் 2:27 எண் 7:72 எண் 10:26 |
14 | காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப். | எண் 7:42 எண் 10:20 |
15 | நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா. | எண் 2:29 எண் 7:78 எண் 10:27 |
16 | இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார். | எண் 2:3-31 எண் 7:2 எண் 7:10-83 எண் 10:14-27 எண் 11:17 எண் 16:2 எண் 26:9 நியா 6:15 1நாளா 27:16-22 |
17 | அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு, | எண் 1:5-15 யோவா 10:3 வெளிப் 7:4-17 |
18 | இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள். | எஸ்றா 2:59 நெகே 7:61 எபிரெ 7:3 எபிரெ 7:6 |
19 | இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான். | எண் 1:2 எண் 26:1 எண் 26:2 2சாமு 24:1-10 |
20 | இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, | எண் 2:10 எண் 2:11 எண் 26:5-7 ஆதி 29:32 ஆதி 46:9 ஆதி 49:3 ஆதி 49:4 1நாளா 5:1 |
21 | ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர். | எண் 2:10 எண் 2:11 எண் 26:7 |
22 | சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, | எண் 2:12 எண் 2:13 எண் 26:12-14 ஆதி 29:33 ஆதி 34:25-30 ஆதி 42:24 ஆதி 46:10 ஆதி 49:5 ஆதி 49:6 |
23 | சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர். | எண் 2:13 எண் 25:8 எண் 25:9 எண் 25:14 எண் 26:14 |
24 | காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, | எண் 2:14 எண் 2:15 எண் 26:15-18 ஆதி 30:10 ஆதி 30:11 ஆதி 46:16 ஆதி 49:19 |
25 | காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர். | எண் 2:15 எண் 26:18 |
26 | யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, | எண் 2:3 எண் 2:4 எண் 26:19-22 ஆதி 29:35 ஆதி 46:12 ஆதி 49:8-12 2சாமு 24:9 1நாளா 5:2 2நாளா 17:14-16 |
27 | யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர். | எண் 2:3 எண் 2:4 எண் 26:22 2சாமு 24:9 2நாளா 17:14-16 |
28 | இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, | எண் 2:5 எண் 2:6 எண் 23:23-25 ஆதி 30:18 ஆதி 46:13 ஆதி 49:14 ஆதி 49:15 |
29 | இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர். | எண் 2:6 எண் 26:25 |
30 | செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, | எண் 2:7 எண் 2:8 எண் 26:26 எண் 26:27 ஆதி 30:20 ஆதி 46:14 ஆதி 49:13 |
31 | செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர். | எண் 2:8 எண் 26:27 |
32 | யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, | எண் 2:18 எண் 2:19 எண் 26:35-37 ஆதி 30:24 ஆதி 37:1-36 ஆதி 39:1-23 ஆதி 46:20 ஆதி 48:1-22 ஆதி 49:22-26 உபா 33:17 |
33 | எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர். | ஆதி 48:5 உபா 33:17 |
34 | மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, |
35 | மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். | எண் 2:21 எண் 26:34 ஆதி 48:19 ஆதி 48:20 |
36 | பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, | ஆதி 35:16-18 ஆதி 44:20 ஆதி 46:21 ஆதி 49:27 |
37 | பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர். | எண் 2:23 எண் 26:41 நியா 20:44-46 2நாளா 17:17 |
38 | தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, | ஆதி 30:5 ஆதி 30:6 ஆதி 46:23 ஆதி 49:16 ஆதி 49:17 |
39 | தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர். | எண் 2:26 எண் 26:43 |
40 | ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, | ஆதி 30:12 ஆதி 30:13 ஆதி 46:27 ஆதி 49:20 |
41 | ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர். | எண் 2:28 எண் 26:47 |
42 | நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, | ஆதி 30:7 ஆதி 30:8 ஆதி 46:24 ஆதி 49:21 |
43 | நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர். | எண் 2:30 எண் 26:50 |
44 | எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள். | எண் 1:2-16 எண் 26:64 |
45 | இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும், |
46 | ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள். | எண் 2:32 எண் 23:10 எண் 26:51 ஆதி 12:2 ஆதி 13:16 ஆதி 15:5 ஆதி 17:6 ஆதி 22:17 ஆதி 26:3 ஆதி 28:14 ஆதி 46:3 ஆதி 46:4 யாத் 12:37 யாத் 38:26 உபா 10:22 1இரா 4:20 2சாமு 24:9 1நாளா 21:5 2நாளா 13:3 2நாளா 17:14-19 எபிரெ 11:11 எபிரெ 11:12 வெளிப் 7:4-9 |
47 | லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை. | எண் 1:3 எண் 1:50 எண் 2:33 எண் 3:1-51 எண் 4:1-49 எண் 8:1-26 எண் 26:57-62 1நாளா 6:1-81 1நாளா 21:6 |
48 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
49 | நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும், | எண் 2:33 எண் 26:62 |
50 | லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள். | எண் 3:1-10 எண் 4:15 எண் 4:25-33 யாத் 31:18 யாத் 32:26-29 யாத் 38:21 1நாளா 23:1-32 1நாளா 25:1-26 எஸ்றா 8:25-30 எஸ்றா 8:33-30 எஸ்றா 8:34-30 நெகே 12:8 நெகே 12:22 நெகே 12:47 நெகே 13:5 நெகே 13:10-13 நெகே 13:22-13 |
51 | வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலை செய்யப்படக்கடவன். | எண் 4:5-33 எண் 10:11 எண் 10:17-21 |
52 | இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள். | எண் 2:2 எண் 2:34 எண் 10:1-36 எண் 24:2 |
53 | இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார். | எண் 1:50 எண் 3:7 எண் 18:3 1தீமோ 4:13-16 2தீமோ 4:2 2தீமோ 8:19 2தீமோ 16:46 2தீமோ 18:5 லேவி 10:6 1சாமு 6:19 எரே 5:31 எரே 23:15 அப் 20:28-31 |
54 | கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள். | எண் 2:34 யாத் 23:21 யாத் 23:22 யாத் 39:32 யாத் 39:43 யாத் 40:16 யாத் 40:32 உபா 12:32 1சாமு 15:22 மத் 28:20 |