1 | கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான். | யாத் 16:29 ஆதி 19:21 1இரா 17:23 2இரா 6:32 பிரச 1:10 |
2 | நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும். | யாத் 4:15 யாத் 6:29 உபா 4:2 1இரா 22:14 எரே 1:7 எரே 1:17 எசே 3:10 எசே 3:17 மத் 28:20 அப் 20:27 |
3 | நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன். | யாத் 4:21 யாத் 4:29 |
4 | பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன். | யாத் 9:3 யாத் 10:1 யாத் 11:9 நியா 2:15 புலம் 3:3 |
5 | நான் எகிப்தின்மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப்பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார். | யாத் 7:17 யாத் 8:10 யாத் 8:22 யாத் 14:4 யாத் 14:18 சங் 9:16 எசே 25:17 எசே 28:22 எசே 36:23 எசே 39:7 எசே 39:22 |
6 | மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். | யாத் 7:2 யாத் 7:10 யாத் 12:28 யாத் 39:43 யாத் 40:16 ஆதி 6:22 ஆதி 22:18 சங் 119:4 யோவா 15:10 யோவா 15:14 |
7 | அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது. | யாத் 2:23 ஆதி 41:46 உபா 29:5 உபா 31:2 உபா 34:7 சங் 90:10 அப் 7:23 அப் 7:30 |
8 | கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: |
9 | உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப்போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார். | ஏசா 7:11 மத் 12:39 யோவா 2:18 யோவா 6:30 யோவா 10:38 |
10 | மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று. | யாத் 4:3 ஆமோ 9:3 மாற் 16:18 லூக் 10:19 |
11 | அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். | ஆதி 41:8 ஆதி 41:38 ஆதி 41:39 ஏசா 19:11 ஏசா 19:12 ஏசா 47:12 ஏசா 47:13 தானி 2:2 தானி 2:27 தானி 4:7-9 தானி 5:7 தானி 5:11 2தீமோ 3:8 வெளிப் 19:20 |
12 | அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று. | யாத் 8:18 யாத் 8:19 யாத் 9:11 அப் 8:9-13 அப் 13:8-11 அப் 19:19 அப் 19:20 1யோவா 4:4 |
13 | கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான். | யாத் 7:4 யாத் 4:21 யாத் 8:15 யாத் 10:1 யாத் 10:20 யாத் 10:27 யாத் 14:17 உபா 2:30 சகரி 7:11 சகரி 7:12 ரோம 1:28 ரோம 2:5 எபிரெ 3:7 எபிரெ 3:8 எபிரெ 3:13 |
14 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான். | யாத் 8:15 யாத் 10:1 யாத் 10:20 யாத் 10:27 சகரி 7:12 |
15 | காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, | யாத் 2:5 யாத் 8:20 எசே 29:3 |
16 | அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்துக்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேளாமற்போனீர். | யாத் 3:18 யாத் 5:3 யாத் 9:1 யாத் 9:13 யாத் 10:3 1சாமு 4:6-9 |
17 | இதோ, என் கையில் இருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி, | யாத் 7:5 யாத் 5:2 யாத் 6:7 1சாமு 17:46 1சாமு 17:47 1இரா 20:28 2இரா 19:19 சங் 9:16 சங் 83:18 எசே 29:9 எசே 30:8 எசே 30:19 எசே 32:15 எசே 38:23 எசே 39:28 தானி 4:17 தானி 4:32 தானி 4:37 தானி 5:21 தானி 5:23 |
18 | நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக்கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். | யாத் 7:24 எண் 11:20 எண் 21:5 |
19 | மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார். | யாத் 8:5 யாத் 8:6 யாத் 8:16 யாத் 9:22 யாத் 9:23 யாத் 9:33 யாத் 10:12 யாத் 10:21 யாத் 14:21 யாத் 14:26 |
20 | கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று. | யாத் 17:5 யாத் 17:6 யாத் 17:9-12 எண் 20:8-12 |
21 | நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது. | யாத் 7:18 வெளிப் 8:9 |
22 | எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான். | யாத் 7:11 யாத் 8:7 யாத் 8:8 எரே 27:18 2தீமோ 3:8 |
23 | பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான். | யாத் 9:21 உபா 32:46 1சாமு 4:20 யோபு 7:17 சங் 62:10 நீதி 22:17 நீதி 24:32 நீதி 29:1 ஏசா 26:11 எரே 5:3 எரே 36:24 எசே 40:4 ஆமோ 4:7-12 ஆபகூ 1:5 மல்கி 2:2 |
24 | நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள். |
25 | கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று. | யாத் 8:9 யாத் 8:10 யாத் 10:23 2சாமு 24:13 |