இணை வசன வேதாகமம்

யாத்திராகமம் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார்.யாத் 14:13 எண் 23:23 உபா 32:39 2இரா 7:2 2இரா 7:19 2நாளா 20:17 சங் 12:5
2மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,யாத் 6:6 யாத் 6:8 யாத் 14:18 யாத் 17:1 யாத் 20:2 ஆதி 15:7 ஏசா 42:8 ஏசா 43:11 ஏசா 43:15 ஏசா 44:6 எரே 9:24 மல்கி 3:6 அப் 17:24 அப் 17:25
3சர்வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.ஆதி 17:1 ஆதி 28:3 ஆதி 35:11 ஆதி 48:3
4அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.ஆதி 6:18 ஆதி 15:18 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 17:13 ஆதி 28:4 2சாமு 23:5 ஏசா 55:3
5எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.யாத் 2:24 யாத் 3:7 சங் 106:44 ஏசா 63:9
6ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,யாத் 6:2 யாத் 6:8 யாத் 6:29 எசே 20:7-9
7உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.யாத் 19:5 யாத் 19:6 ஆதி 17:7 ஆதி 17:8 உபா 4:20 உபா 7:6 உபா 14:2 உபா 26:18 2சாமு 7:23 2சாமு 7:24 எரே 31:33 ஓசி 1:10 1பேது 2:10
8ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.ஆதி 14:22 உபா 32:40 எசே 20:5 எசே 20:6 எசே 20:15 எசே 20:23 எசே 20:28 எசே 20:42 எசே 36:7 எசே 47:14
9இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள்.யாத் 5:21 யாத் 14:12 யோபு 21:4 நீதி 14:19
10பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
11நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.யாத் 6:29 யாத் 3:10 யாத் 5:1 யாத் 5:23 யாத் 7:1
12மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.யாத் 6:9 யாத் 3:13 யாத் 4:29-31 யாத் 5:19-21
13கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.எண் 27:19 எண் 27:23 உபா 31:14 சங் 91:11 மத் 4:6 1தீமோ 1:18 1தீமோ 5:21 1தீமோ 6:13 1தீமோ 6:17 2தீமோ 2:4 2தீமோ 4:1
14அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.யாத் 6:25 யோசு 14:1 யோசு 19:51 1நாளா 5:24 1நாளா 7:2 1நாளா 7:7 1நாளா 8:6
15சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.ஆதி 46:10 எண் 26:12 எண் 26:13 1நாளா 4:24
16உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.ஆதி 46:11 எண் 3:17 1நாளா 6:1 1நாளா 6:16
17அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.ஆதி 46:11 எண் 3:18
18கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.எண் 3:19
19மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.எண் 3:20 1நாளா 6:19 1நாளா 23:21
20அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.யாத் 2:1 யாத் 2:2 எண் 26:59
21இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.யாத் 6:24 எண் 16:1 எண் 16:32 எண் 26:10 எண் 26:11 1நாளா 6:37 1நாளா 6:38
22ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.லேவி 10:4 நெகே 3:20
23ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம் பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.லூக் 1:5
24கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.யாத் 6:21 எண் 16:1 எண் 16:32 எண் 26:9-11 1நாளா 6:22 1நாளா 6:33 1நாளா 6:37 1நாளா 6:38 சங் 84:1-12 சங் 85:1
25ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.எண் 25:7-13 எண் 31:6 யோசு 22:13 யோசு 22:31 யோசு 22:32 யோசு 24:33 நியா 20:28 சங் 106:30 சங் 106:31
26இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்துதேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குக் கர்த்தரால் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.யாத் 6:13 யாத் 6:20 யோசு 24:5 1சாமு 12:6 1சாமு 12:8 1நாளா 6:3 சங் 77:20 சங் 99:6 மீகா 6:4
27இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.யாத் 5:1-3 யாத் 7:10
28கர்த்தர் எகிப்துதேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;
29கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,யாத் 6:2 யாத் 6:6 யாத் 6:8
30மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.யாத் 6:12 யாத் 4:10 1கொரி 9:16 1கொரி 9:17

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.