1 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
2 | நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு. | யாத் 40:17 யாத் 12:1 யாத் 12:2 யாத் 13:4 எண் 7:1 |
3 | அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து, | யாத் 40:20 யாத் 40:21 யாத் 25:10 யாத் 25:22 யாத் 26:31 யாத் 26:33 யாத் 26:34 யாத் 35:12 யாத் 36:35 யாத் 36:36 யாத் 37:1-9 லேவி 16:14 எண் 4:5 வெளிப் 11:19 |
4 | மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி, | யாத் 40:22 யாத் 40:25 யாத் 25:23-30 யாத் 26:35 யாத் 26:36 யாத் 37:10-24 |
5 | பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய். | யாத் 40:26 யாத் 40:27 யாத் 30:1-5 யாத் 35:25-28 யாத் 37:25-28 யோவா 14:6 எபிரெ 9:24 எபிரெ 10:19-22 1யோவா 2:1 1யோவா 2:2 |
6 | பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, | யாத் 40:29 யாத் 27:1-8 யாத் 38:1-7 எபே 1:6 எபே 1:7 எபிரெ 13:10 1யோவா 2:2 1யோவா 4:9 1யோவா 4:10 |
7 | தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து, | யாத் 40:30-32 யாத் 30:18-21 யாத் 38:8 சங் 26:6 சகரி 13:1 தீத் 3:5 எபிரெ 10:22 1யோவா 1:7 வெளிப் 1:5 வெளிப் 1:6 |
8 | சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்குதிரையைத் தூக்கிவைத்து, | யாத் 40:33 யாத் 27:9-19 யாத் 38:9-20 மத் 16:18 1கொரி 12:28 எபே 4:11 எபே 4:12 |
9 | அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும். | யாத் 30:23-33 யாத் 37:29 யாத் 39:39 லேவி 8:10 எண் 7:1 சங் 45:7 ஏசா 11:2 ஏசா 61:1 மத் 3:16 யோவா 3:34 2கொரி 1:4 2கொரி 1:22 1யோவா 2:20 |
10 | தகனபலிபீடத்தையும், அதின் சகல பணிமுட்டுகளையும், அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும். | யாத் 29:36 யாத் 29:37 லேவி 8:11 ஏசா 11:2 ஏசா 61:1 யோவா 3:34 யோவா 17:19 |
11 | தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக. |
12 | பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து, | யாத் 29:1-35 லேவி 8:1-13 லேவி 9:1-24 ஏசா 11:1-5 ஏசா 61:1-3 மத் 3:16 லூக் 1:35 யோவா 3:34 ரோம 8:3 கலா 4:4 |
13 | ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக. | யாத் 28:41 ஏசா 61:1 யோவா 3:34 யோவா 17:19 எபிரெ 10:10 எபிரெ 10:29 1யோவா 2:20 1யோவா 2:27 |
14 | அவன் குமாரரையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிளை உடுத்தி, | ஏசா 44:3-5 ஏசா 61:10 யோவா 1:16 ரோம 8:30 ரோம 13:14 1கொரி 1:9 1கொரி 1:30 |
15 | அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும் என்றார். | யாத் 12:14 யாத் 30:31 யாத் 30:33 எண் 25:13 சங் 110:4 எபிரெ 5:1-14 எபிரெ 7:3 எபிரெ 7:7 எபிரெ 7:17-24 எபிரெ 8:1-10 |
16 | கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான். | யாத் 40:17-32 யாத் 23:21 யாத் 23:22 யாத் 39:42 யாத் 39:43 உபா 4:1 உபா 12:32 ஏசா 8:20 மத் 28:20 1கொரி 4:2 |
17 | இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது. | யாத் 40:1 யாத் 40:2 எண் 7:1 எண் 9:1 |
18 | மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி, | யாத் 40:2 யாத் 26:15-30 யாத் 36:20-34 லேவி 26:11 எசே 37:27 எசே 37:28 யோவா 1:14 கலா 4:4 1பேது 1:5 வெளிப் 21:3 |
19 | வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான். | யாத் 26:1-14 யாத் 36:8-19 |
20 | பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து, | யாத் 16:34 யாத் 25:16-21 யாத் 31:18 சங் 40:8 மத் 3:15 |
21 | பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான். | யாத் 40:3 யாத் 26:33 யாத் 35:12 |
22 | பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து, | யோவா 6:53-57 எபே 3:8 |
23 | அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான். | யாத் 40:4 யாத் 25:30 மத் 12:4 எபிரெ 9:2 |
24 | பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து, | யாத் 25:31-35 யாத் 37:17-24 சங் 119:105 யோவா 1:1 யோவா 1:5 யோவா 1:9 யோவா 8:12 வெளிப் 1:20 வெளிப் 2:5 |
25 | கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான். | யாத் 40:4 யாத் 25:37 வெளிப் 4:5 |
26 | பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து, | யாத் 40:5 யாத் 30:1-10 மத் 23:19 யோவா 11:42 யோவா 17:1-26 எபிரெ 7:25 எபிரெ 10:1 1யோவா 2:1 |
27 | அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான். | யாத் 30:7 |
28 | பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்குதிரையைத் தூக்கிவைத்து, | யாத் 40:5 யாத் 26:36 யாத் 26:37 யாத் 38:9-19 யோவா 14:6 யோவா 10:9 எபே 2:18 எபிரெ 10:19 எபிரெ 10:20 |
29 | தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான். | யாத் 40:6 யாத் 27:1-8 யாத் 38:1-7 மத் 23:19 ரோம 3:24-26 எபிரெ 9:12 எபிரெ 13:5 எபிரெ 13:6 எபிரெ 13:10 |
30 | அவன் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான். | யாத் 40:7 யாத் 30:18-21 யாத் 38:8 எசே 36:25 எபிரெ 10:22 |
31 | அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள். | சங் 26:6 சங் 51:6 சங் 51:7 யோவா 13:10 1யோவா 1:7 1யோவா 1:9 |
32 | கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கிறபோதும், பலிபீடத்தண்டையில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள். | யாத் 40:19 யாத் 30:19 யாத் 30:20 சங் 73:19 |
33 | பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரத்தின் தொங்குதிரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாய் மோசே வேலையை முடித்தான். | யாத் 40:8 யாத் 27:9-16 எண் 1:50 மத் 16:8 1கொரி 12:12 1கொரி 12:28 எபே 4:11-13 எபிரெ 9:6 எபிரெ 9:7 |
34 | அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று. | யாத் 13:21 யாத் 13:22 யாத் 14:19 யாத் 14:20 யாத் 14:24 யாத் 25:8 யாத் 25:21 யாத் 25:22 யாத் 29:43 யாத் 33:9 லேவி 16:2 எண் 9:15-23 1இரா 8:10 1இரா 8:11 2நாளா 5:13 2நாளா 7:2 சங் 18:10-12 ஏசா 4:5 ஏசா 4:6 ஏசா 6:4 எசே 43:4-7 ஆகா 2:7 ஆகா 2:9 வெளிப் 15:8 வெளிப் 21:3 வெளிப் 21:23 வெளிப் 21:24 |
35 | மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக்கூடாமல் இருந்தது. | லேவி 16:2 1இரா 8:11 2நாளா 5:14 2நாளா 7:2 ஏசா 6:4 வெளிப் 15:8 |
36 | வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணப் புறப்படுவார்கள். | யாத் 13:21 யாத் 13:22 எண் 10:11-13 எண் 10:33-36 எண் 19:17-22 நெகே 9:19 சங் 78:14 சங் 105:39 1கொரி 10:1 2கொரி 5:19 2கொரி 5:20 |
37 | மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம்பண்ணாதிருப்பார்கள். | எண் 9:19-22 சங் 31:15 |
38 | இஸ்ரவேல் வம்சத்தார் பண்ணும் எல்லாப் பிரயாணங்களிலும் அவர்களெல்லாருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாகப் பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தது. | யாத் 13:21 எண் 9:15 |