1 | மோசே இஸ்ரவேல், புத்திரராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: | யாத் 25:1-40 யாத் 31:1-11 யாத் 34:32 |
2 | நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன். | யாத் 20:9 யாத் 20:10 யாத் 23:12 யாத் 31:13-16 யாத் 34:21 லேவி 23:3 உபா 5:12-15 லூக் 13:14 |
3 | ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான். | யாத் 12:16 யாத் 16:23 எண் 15:32-36 ஏசா 58:13 |
4 | பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: | யாத் 25:1 யாத் 25:2 |
5 | உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், | யாத் 25:2-7 நியா 5:9 சங் 110:3 மாற் 12:41-44 2கொரி 8:11 2கொரி 8:12 2கொரி 9:7 |
6 | இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும், | யாத் 26:1 யாத் 26:31 யாத் 26:36 யாத் 28:5 யாத் 28:6 யாத் 28:15 யாத் 28:33 |
7 | சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், |
8 | விளக்குக்கு எண்ணெயும், அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், | யாத் 27:20 |
9 | ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே. | யாத் 25:5 யாத் 28:9 யாத் 28:17-21 யாத் 39:6-14 |
10 | உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக. | யாத் 31:1-6 யாத் 36:1-4 |
11 | வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், | யாத் 26:1 யாத் 26:2-37 யாத் 31:7-9 யாத் 36:8-34 |
12 | பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும், | யாத் 25:10-22 யாத் 37:1-9 |
13 | மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும், | யாத் 25:23-30 யாத் 37:10-16 லேவி 24:5 லேவி 24:6 |
14 | வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும், | யாத் 25:31-39 யாத் 37:17-24 சங் 148:3 மத் 5:14 மத் 5:15 |
15 | தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும், | யாத் 30:1-10 யாத் 30:22-38 யாத் 37:25-28 சங் 141:2 |
16 | தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும், | யாத் 27:1-8 யாத் 38:1-7 |
17 | பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும், | யாத் 27:9-19 யாத் 38:9-20 2சாமு 7:2 |
18 | வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும், | யாத் 27:19 |
19 | பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும் அவன் குமாரரின் வஸ்திரங்களையும் அவர்கள் செய்யக்கடவர்கள் என்றான். | யாத் 31:10 யாத் 39:1 யாத் 39:41 எண் 4:5-15 |
20 | அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள். |
21 | பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். | யாத் 35:5 யாத் 35:22 யாத் 35:26 யாத் 35:29 யாத் 25:2 யாத் 36:2 நியா 5:3 நியா 5:9 நியா 5:12 2சாமு 7:27 1நாளா 28:2 1நாளா 28:9 1நாளா 29:3 1நாளா 29:5 1நாளா 29:6 1நாளா 29:9 1நாளா 29:14 1நாளா 29:17 1நாளா 29:18 எஸ்றா 1:5 எஸ்றா 1:6 எஸ்றா 7:27 சங் 110:3 எரே 30:21 நீதி 4:23 மத் 12:34 2கொரி 8:12 2கொரி 9:7 |
22 | மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான். | யாத் 32:3 எண் 31:50 ஏசா 3:19 எசே 16:11 |
23 | இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். | யாத் 35:6-10 யாத் 25:2-7 1நாளா 29:8 |
24 | வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். | 2கொரி 8:12 |
25 | ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள். | யாத் 28:3 யாத் 31:6 யாத் 36:1 2இரா 23:7 நீதி 14:1 நீதி 31:19-24 லூக் 8:2 லூக் 8:3 அப் 9:39 ரோம 16:1-4 ரோம 16:6-4 ரோம 16:12-4 கலா 3:28 பிலிப் 4:3 |
26 | எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத்திரித்தார்கள். | யாத் 35:21 யாத் 35:29 யாத் 36:8 |
27 | பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும், | யாத் 35:9 1நாளா 29:6 எஸ்றா 2:68 |
28 | பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகதைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள். | யாத் 35:8 யாத் 30:23-38 |
29 | செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள். | யாத் 35:21 யாத் 35:22 1நாளா 29:3 1நாளா 29:6 1நாளா 29:9 1நாளா 29:10 1நாளா 29:14 1நாளா 29:17 நியா 5:2 நியா 5:9 1கொரி 9:17 2கொரி 9:7 |
30 | பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, | யாத் 31:2-6 1இரா 7:13 1இரா 7:14 ஏசா 28:26 1கொரி 3:10 1கொரி 12:4 1கொரி 12:11 யாக் 1:17 |
31 | அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும், | ஏசா 11:2-5 ஏசா 28:26 ஏசா 61:1-3 1கொரி 12:4-10 கொலோ 2:3 யாக் 1:17 |
32 | இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும், |
33 | அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார். |
34 | அவன் இருதயத்திலும், தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார். | எஸ்றா 7:10 எஸ்றா 7:27 நெகே 2:12 யாக் 1:16 யாக் 1:17 |
35 | சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான். | யாத் 35:31 யாத் 31:3 யாத் 31:6 1இரா 3:12 1இரா 7:14 2நாளா 2:14 ஏசா 28:26 |