1 | அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக. | யாத் 29:21 யாத் 20:11 யாத் 28:41 லேவி 8:2-36 மத் 6:9 |
2 | புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லியமாவினால்பண்ணி, | யாத் 12:8 லேவி 2:4 லேவி 6:20-22 லேவி 8:2 1கொரி 5:7 |
3 | அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, | லேவி 8:2 லேவி 8:26 லேவி 8:31 எண் 6:17 |
4 | ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி, | யாத் 26:36 யாத் 40:28 லேவி 8:3-6 |
5 | அந்த வஸ்திரங்கள எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி, | யாத் 28:2-8 லேவி 8:7 லேவி 8:8 |
6 | அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து, | யாத் 28:36-39 லேவி 8:9 |
7 | அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக. | யாத் 28:41 யாத் 30:23-31 லேவி 8:10-12 லேவி 10:7 லேவி 21:10 எண் 35:25 சங் 89:20 சங் 133:2 ஏசா 61:1 யோவா 3:34 1யோவா 2:27 |
8 | பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக. | யாத் 28:40 லேவி 8:13 |
9 | ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டைபண்ணுவாயாக. | யாத் 28:1 எண் 16:10 எண் 16:35 எண் 16:40 எண் 18:7 எபிரெ 5:4 எபிரெ 5:5 எபிரெ 5:10 எபிரெ 7:11-14 |
10 | காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள். | யாத் 29:15 யாத் 29:19 லேவி 1:4 லேவி 3:2 லேவி 8:14 லேவி 8:18 லேவி 16:21 ஏசா 53:6 2கொரி 5:21 |
11 | பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து, | லேவி 1:4 லேவி 1:5 லேவி 8:15 லேவி 9:8 லேவி 9:12 |
12 | அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி, | லேவி 8:15 லேவி 9:9 லேவி 16:14 லேவி 16:18 லேவி 16:19 எபிரெ 9:13 எபிரெ 9:14 எபிரெ 9:22 எபிரெ 10:4 |
13 | குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு, | யாத் 29:22 லேவி 3:3 லேவி 3:4 லேவி 3:9 லேவி 3:10 லேவி 3:14-16 லேவி 4:8 லேவி 4:9 லேவி 4:26 லேவி 4:31 லேவி 4:35 லேவி 6:12 லேவி 7:3 லேவி 7:31 சங் 22:14 ஏசா 1:11 ஏசா 34:6 ஏசா 43:24 |
14 | காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய்; இது பாவநிவாரணபலி. | லேவி 4:11 லேவி 4:12 லேவி 4:21 லேவி 8:17 லேவி 16:27 எபிரெ 13:11-13 |
15 | பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள். | யாத் 29:3 யாத் 29:19 லேவி 8:18-21 |
16 | அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து, | யாத் 29:11 யாத் 29:12 |
17 | ஆட்டுக்கடாவைச் சந்துசந்தாகத்துண்டித்து, அதின் குடல்களையும் அதின் தொடைகளையும் கழுவி, அவைகளை அந்தத் துண்டங்களின்மேலும் அதின் தலையின்மேலும் வைத்து, | லேவி 1:9 லேவி 1:13 லேவி 8:21 லேவி 9:14 எரே 4:14 மத் 23:26 |
18 | ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும். | ஆதி 22:2 ஆதி 22:7 ஆதி 22:13 லேவி 9:24 1சாமு 7:9 1இரா 3:4 1இரா 18:38 சங் 50:8 ஏசா 1:11 எரே 6:20 எரே 7:21 எரே 7:22 மாற் 12:33 எபிரெ 10:6-10 |
19 | பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள். | யாத் 29:3 லேவி 8:22-29 |
20 | அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, | லேவி 8:24 லேவி 14:14 ஏசா 50:5 மாற் 7:33 |
21 | பலிபீடத்தின்மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப் படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர்மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள்மேலும் தெளிப்பாயாக. | யாத் 29:7 யாத் 30:25-31 லேவி 8:30 லேவி 14:15-18 லேவி 14:29-18 சங் 133:2 ஏசா 11:2-5 ஏசா 61:1-3 |
22 | அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும், | யாத் 29:13 லேவி 8:25-27 |
23 | கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து, | யாத் 29:2 யாத் 29:3 |
24 | அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் குமாரரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி, | லேவி 8:27 |
25 | பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி. | லேவி 7:29-31 லேவி 8:28 சங் 99:6 |
26 | ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும். | லேவி 8:29 |
27 | மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக. | லேவி 7:31-34 லேவி 8:29 லேவி 9:21 லேவி 10:15 எண் 6:20 எண் 18:11 எண் 18:18 எண் 18:19 உபா 18:3 |
28 | அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதினால், இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவன் குமாரரையும் சேர்வதாக; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஏறெடுத்துப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாயிருக்கவேண்டும். | லேவி 7:32-34 லேவி 10:14 லேவி 10:15 உபா 18:3 |
29 | ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள். | யாத் 28:3 யாத் 28:4 |
30 | அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக்கொள்ளக்கடவன். | எண் 20:28 எபிரெ 7:26 |
31 | பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக. | லேவி 8:31 1சாமு 2:13 1சாமு 2:15 எசே 46:20-24 |
32 | அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள். | யாத் 24:9-11 லேவி 10:12-14 |
33 | அவர்களைப் பிரதிஷ்டைப்பண்ணிப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் புசிக்கக்கடவர்கள்; அந்நியனோ அவைகளைப் புசிக்கலாகாது; அவைகள் பரிசுத்தமானவைகள். | லேவி 10:13-18 சங் 22:26 யோவா 6:53-55 1கொரி 11:24 1கொரி 11:26 |
34 | பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது. | யாத் 29:22 யாத் 29:26 யாத் 29:28 |
35 | இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக; ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, | யாத் 40:12-15 லேவி 8:4-36 |
36 | பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவ நிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்தபின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்பண்ணக்கடவாய். | யாத் 29:10-14 எசே 43:25 எசே 43:27 எசே 48:18-20 எபிரெ 10:11 |
37 | ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும். | யாத் 40:10 தானி 9:24 |
38 | பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். | எண் 28:3-8 1நாளா 16:40 2நாளா 2:4 2நாளா 13:11 2நாளா 31:3 எஸ்றா 3:3 தானி 9:21 தானி 9:27 தானி 12:11 யோவா 1:29 எபிரெ 7:27 1பேது 1:19 வெளிப் 5:9-12 |
39 | ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக. | 2இரா 16:15 2நாளா 13:11 சங் 5:3 சங் 55:16 சங் 55:17 எசே 46:13-15 லூக் 1:10 அப் 26:7 |
40 | ஒரு மரக்காலிலே பத்திலொரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே படைப்பாயாக. | யாத் 16:36 எண் 15:4 எண் 15:9 எண் 28:5 எண் 28:13 |
41 | மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின போஜனபலிக்கும் பானபலிக்கும் ஒத்தபிரகாரம் அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கக்கடவாய். | 1இரா 18:29 1இரா 18:36 2இரா 16:15 எஸ்றா 9:4 எஸ்றா 9:5 சங் 141:2 எசே 46:13-15 தானி 9:21 |
42 | உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே. |
43 | அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும். | யாத் 40:34 1இரா 8:11 2நாளா 5:14 2நாளா 7:1-3 ஏசா 6:1-3 ஏசா 60:1 எசே 43:5 ஆகா 2:7-9 மல்கி 3:1 2கொரி 3:18 2கொரி 4:6 1யோவா 3:2 வெளிப் 21:22 வெளிப் 21:23 |
44 | ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி, | லேவி 21:15 லேவி 22:9 லேவி 22:16 யோவா 10:36 வெளிப் 1:5 வெளிப் 1:6 |
45 | இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன். | யாத் 15:17 யாத் 25:8 லேவி 26:12 சங் 68:18 சகரி 2:10 யோவா 14:17 யோவா 14:20 யோவா 14:23 2கொரி 6:16 எபே 2:22 வெளிப் 21:3 |
46 | தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர். | யாத் 20:2 எரே 31:33 |