1அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.யாத் 9:14 லேவி 26:21 உபா 4:34 1சாமு 6:4 யோபு 10:17 வெளிப் 16:9 2இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார்.யாத் 3:22 யாத் 12:1 யாத் 12:2 யாத் 12:35 யாத் 12:36 ஆதி 31:9 யோபு 27:16 யோபு 27:17 சங் 24:1 சங் 105:37 நீதி 13:22 ஆகா 2:8 மத் 20:15 3அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்.யாத் 3:21 யாத் 12:36 ஆதி 39:21 சங் 106:46 4அப்பொழுது மோசே: கர்த்தர் நடுராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப்போவேன்.யாத் 12:12 யாத் 12:23 யாத் 12:29 யோபு 34:20 ஆமோ 4:10 ஆமோ 5:17 மத் 25:6 5அப்பொழுது சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி,யாத் 4:23 யாத் 12:12 யாத் 12:29 யாத் 13:15 சங் 78:51 சங் 105:36 சங் 135:8 சங் 136:10 எபிரெ 11:28 6அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.யாத் 3:7 யாத் 12:30 நீதி 21:13 ஏசா 15:4 ஏசா 15:5 ஏசா 15:8 எரே 31:15 புலம் 3:8 ஆமோ 5:17 செப் 1:10 லூக் 13:28 வெளிப் 6:16 வெளிப் 6:17 வெளிப் 18:18 வெளிப் 18:19 7ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.யோசு 10:21 யோபு 5:16 8அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.யாத் 12:31-33 ஏசா 49:23 ஏசா 49:26 வெளிப் 3:9 9கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான் என்று சொல்லியிருந்தார்.யாத் 3:19 யாத் 7:4 யாத் 10:1 ரோம 9:16-18 10மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.யாத் 4:21 யாத் 7:13 யாத் 7:14 யாத் 10:20 யாத் 10:27 உபா 2:30 1சாமு 6:6 யோபு 9:4 ரோம 2:4 ரோம 2:5 ரோம 9:22