1 | சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது. | ஆதி 17:17 |
2 | கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான். | ஆதி 23:19 ஆதி 13:18 எண் 13:22 யோசு 10:39 யோசு 14:14 யோசு 14:15 யோசு 20:7 நியா 1:10 1சாமு 20:31 2சாமு 2:11 2சாமு 5:3 2சாமு 5:5 1நாளா 6:57 |
3 | பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி: | ஆதி 23:5 ஆதி 23:7 ஆதி 10:15 ஆதி 25:10 ஆதி 27:46 ஆதி 49:30 1சாமு 26:6 2சாமு 23:39 |
4 | நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான். | ஆதி 17:8 ஆதி 47:9 லேவி 25:23 1நாளா 29:15 சங் 39:12 சங் 105:12 சங் 105:13 சங் 119:19 எபிரெ 11:9 எபிரெ 11:13-16 1பேது 2:11 |
5 | அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக: |
6 | எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள். | ஆதி 18:12 ஆதி 24:18 ஆதி 24:35 ஆதி 31:35 ஆதி 32:4 ஆதி 32:5 ஆதி 32:18 ஆதி 42:10 ஆதி 44:5 ஆதி 44:8 யாத் 32:22 ரூத் 2:13 |
7 | அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து, | ஆதி 18:2 ஆதி 19:1 நீதி 18:24 ரோம 12:17 ரோம 12:18 எபிரெ 12:14 1பேது 3:8 |
8 | அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன், | 1இரா 2:17 லூக் 7:3 லூக் 7:4 எபிரெ 7:26 1யோவா 2:1 1யோவா 2:2 |
9 | தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான். | ரோம 12:17 ரோம 13:8 |
10 | எப்பெரோன் ஏத்தின் புத்திரர் நடுவிலே உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் புத்திரர் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக: | ஆதி 23:18 ஆதி 34:20 ஆதி 34:24 ரூத் 4:1-4 யோபு 29:7 ஏசா 28:6 |
11 | அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான். | ஆதி 23:6 2சாமு 24:20-24 1நாளா 21:22-24 ஏசா 32:8 |
12 | அப்பொழுது ஆபிரகாம் அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து, | ஆதி 23:7 ஆதி 18:2 ஆதி 19:1 |
13 | தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம்பண்ணுவேன் என்றான். | ஆதி 14:22 ஆதி 14:23 2சாமு 24:24 அப் 20:35 ரோம 13:8 பிலிப் 4:5-8 கொலோ 4:5 எபிரெ 13:5 |
14 | அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக: |
15 | என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும்; எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம் பண்ணும் என்றான். | யாத் 30:15 எசே 45:12 |
16 | அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான். | ஆதி 43:21 எஸ்றா 8:25-30 யோபு 28:15 எரே 32:9 சகரி 11:12 மத் 7:12 ரோம 13:8 பிலிப் 4:8 1தெச 4:6 |
17 | இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும், | ஆதி 23:20 ஆதி 25:9 ஆதி 49:30-32 ஆதி 50:13 அப் 7:16 |
18 | அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் புத்திரர் எல்லாரும் அறிய ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது. | ஆதி 34:20 ரூத் 4:1 எரே 32:12 |
19 | அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான் தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்பண்ணினான். | ஆதி 3:19 ஆதி 25:9 ஆதி 25:10 ஆதி 35:27-29 ஆதி 47:30 ஆதி 49:29-32 ஆதி 50:13 ஆதி 50:25 யோபு 30:23 பிரச 6:3 பிரச 12:5 பிரச 12:7 |
20 | இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது. | ரூத் 4:7-10 2சாமு 24:24 எரே 32:10 எரே 32:11 |