1 | இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். | யாத் 15:25 யாத் 15:26 யாத் 16:4 உபா 8:2 உபா 13:3 நியா 2:22 2சாமு 24:1 2நாளா 32:31 நீதி 17:3 1கொரி 10:13 எபிரெ 11:17 யாக் 1:12-14 யாக் 2:21 1பேது 1:7 |
2 | அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். | ஆதி 17:19 ஆதி 21:12 யோவா 3:16 ரோம 5:8 ரோம 8:32 எபிரெ 11:17 1யோவா 4:9 1யோவா 4:10 |
3 | ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். | ஆதி 17:23 ஆதி 21:14 சங் 119:60 பிரச 9:10 ஏசா 26:3 ஏசா 26:4 மத் 10:37 மாற் 10:28-31 லூக் 14:26 கலா 1:16 எபிரெ 11:8 எபிரெ 11:17-19 |
4 | மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். | யாத் 5:3 யாத் 15:22 யாத் 19:11 யாத் 19:15 லேவி 7:17 எண் 10:33 எண் 19:12 எண் 19:19 எண் 31:19 யோசு 1:11 2இரா 20:5 எஸ்தர் 5:1 ஓசி 6:2 மத் 17:23 லூக் 13:32 1கொரி 15:4 |
5 | அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான். | எபிரெ 12:1 |
6 | ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள். | ஏசா 53:6 மத் 8:17 லூக் 24:26 லூக் 24:27 யோவா 19:17 1பேது 2:24 |
7 | அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். | மத் 26:39 மத் 26:42 யோவா 18:11 ரோம 8:15 |
8 | அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், | ஆதி 18:14 2நாளா 25:9 மத் 19:26 யோவா 1:29 யோவா 1:36 1பேது 1:19 1பேது 1:20 வெளிப் 5:6 வெளிப் 5:12 வெளிப் 7:14 வெளிப் 13:8 |
9 | தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். | ஆதி 22:2-4 மத் 21:1-46 மத் 26:1-27 |
10 | பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். | ஏசா 53:6-12 எபிரெ 11:17-19 யாக் 2:21-23 |
11 | அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். | ஆதி 22:12 ஆதி 22:16 ஆதி 16:7 ஆதி 16:9 ஆதி 16:10 ஆதி 21:17 |
12 | அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். | 1சாமு 15:22 யோபு 5:19 எரே 19:5 மீகா 6:6-8 1கொரி 10:13 2கொரி 8:12 எபிரெ 11:19 |
13 | ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். | ஆதி 22:8 சங் 40:6-8 சங் 89:19 சங் 89:20 ஏசா 30:21 1கொரி 10:13 2கொரி 1:9 2கொரி 1:10 |
14 | ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. | ஆதி 16:13 ஆதி 16:14 ஆதி 28:19 ஆதி 32:30 யாத் 17:15 நியா 6:24 1சாமு 7:12 எசே 48:35 |
15 | கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: |
16 | நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; | ஆதி 12:2 சங் 105:9 ஏசா 45:23 எரே 49:13 எரே 51:14 ஆமோ 6:8 லூக் 1:73 ரோம 4:13 ரோம 4:14 எபிரெ 6:13 எபிரெ 6:14 |
17 | நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், | ஆதி 12:2 ஆதி 27:28 ஆதி 27:29 ஆதி 28:3 ஆதி 28:14-22 ஆதி 49:25 ஆதி 49:26 உபா 28:2-13 எபே 1:3 |
18 | நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். | ஆதி 12:3 ஆதி 18:18 ஆதி 26:4 சங் 72:17 அப் 3:25 ரோம 1:3 கலா 3:8 கலா 3:9 கலா 3:16 கலா 3:18 கலா 3:28 கலா 3:29 எபே 1:3 |
19 | ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயெர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயெர்செபாவிலே குடியிருந்தான். | ஆதி 21:31 யோசு 15:28 நியா 20:1 |
20 | இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்; | நீதி 25:25 |
21 | அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல், | யோபு 1:1 |
22 | கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான். |
23 | அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள். | ஆதி 24:15 ஆதி 24:24 ஆதி 24:47 ஆதி 25:20 ஆதி 28:2 ஆதி 28:5 |
24 | ரேயுமாள் என்று பேர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள். | ஆதி 16:3 ஆதி 25:6 நீதி 15:25 |