1 | பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, | ஆதி 15:1 ஆதி 17:1-3 ஆதி 17:22-3 ஆதி 26:2 ஆதி 48:3 யாத் 4:1 2நாளா 1:7 அப் 7:2 |
2 | தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து: | நியா 13:3 நியா 13:9 எபிரெ 13:2 |
3 | ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். | ஆதி 32:5 |
4 | கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். | ஆதி 19:2 ஆதி 24:32 ஆதி 43:24 1சாமு 25:41 லூக் 7:44 யோவா 13:5-15 1தீமோ 5:10 |
5 | நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். | நியா 6:18 நியா 13:15 மத் 6:11 |
6 | அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். | ஏசா 32:8 மத் 13:33 லூக் 10:38-40 அப் 16:15 ரோம 12:13 கலா 5:13 எபிரெ 13:2 1பேது 4:9 |
7 | ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். | ஆதி 19:3 நியா 13:15 நியா 13:16 ஆமோ 6:4 மல்கி 1:14 மத் 22:4 லூக் 15:23 லூக் 15:27 லூக் 15:30 |
8 | ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள். | ஆதி 19:3 உபா 32:14 நியா 5:25 |
9 | அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். | ஆதி 4:9 |
10 | அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். | ஆதி 18:13 ஆதி 18:14 ஆதி 16:10 ஆதி 22:15 ஆதி 22:16 |
11 | ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. | ஆதி 17:17 ஆதி 17:24 லூக் 1:7 லூக் 1:18 லூக் 1:36 ரோம 4:18-21 எபிரெ 11:11 எபிரெ 11:12 எபிரெ 11:19 |
12 | ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள். | ஆதி 18:13 ஆதி 17:17 ஆதி 21:6 ஆதி 21:7 சங் 126:2 லூக் 1:18-20 லூக் 1:34-20 லூக் 1:35-20 எபிரெ 11:11 எபிரெ 11:12 |
13 | அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? | யோவா 2:25 |
14 | கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். | எண் 11:23 உபா 7:21 1சாமு 14:6 2இரா 7:1 2இரா 7:2 யோபு 36:5 யோபு 42:2 சங் 93:1 சங் 95:3 எரே 32:17 மீகா 7:18 சகரி 8:6 மத் 3:9 மத் 14:31 மத் 19:26 மாற் 10:27 லூக் 1:13 லூக் 1:37 லூக் 8:50 எபே 3:20 பிலிப் 3:21 பிலிப் 4:13 எபிரெ 11:19 |
15 | சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார். | ஆதி 4:9 ஆதி 12:13 யோபு 2:10 நீதி 28:13 யோவா 18:17 யோவா 18:25-27 எபே 4:23 கொலோ 3:9 1யோவா 1:8 |
16 | பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான். | அப் 15:3 அப் 20:38 அப் 21:5 ரோம 15:24 3யோவா 1:6 |
17 | அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், | 2இரா 4:27 2நாளா 20:7 சங் 25:14 ஆமோ 3:7 யோவா 15:15 யாக் 2:23 |
18 | நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? | ஆதி 12:2 ஆதி 12:3 ஆதி 22:17 ஆதி 22:18 ஆதி 26:4 சங் 72:17 அப் 3:25 அப் 3:26 கலா 3:8 கலா 3:14 எபே 1:3 |
19 | கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். | 2சாமு 7:20 சங் 1:6 சங் 11:4 சங் 34:15 யோவா 10:14 யோவா 21:17 2தீமோ 2:19 |
20 | பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், | ஆதி 4:10 ஆதி 19:13 ஏசா 3:9 ஏசா 5:7 எரே 14:7 யாக் 5:4 |
21 | நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். | ஆதி 11:5 ஆதி 11:7 யாத் 3:8 யாத் 33:5 மீகா 1:3 யோவா 6:38 1தெச 4:16 |
22 | அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். | ஆதி 18:2 ஆதி 19:1 |
23 | அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? | சங் 73:28 எரே 30:21 எபிரெ 10:22 யாக் 5:17 |
24 | பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? | ஆதி 18:32 ஏசா 1:9 எரே 5:1 மத் 7:13 மத் 7:14 |
25 | துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். | எரே 12:1 |
26 | அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். | ஏசா 6:13 ஏசா 10:22 ஏசா 19:24 ஏசா 65:8 எரே 5:1 எசே 22:30 மத் 24:22 |
27 | அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். | ஆதி 18:30-32 எஸ்றா 9:6 யோபு 42:6-8 ஏசா 6:5 லூக் 18:1 |
28 | ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். | எண் 14:17-19 1இரா 20:32 1இரா 20:33 யோபு 23:3 யோபு 23:4 |
29 | அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். | எபே 6:18 எபிரெ 4:16 |
30 | அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். | ஆதி 44:18 நியா 6:39 எஸ்தர் 4:11-16 யோபு 40:4 சங் 9:12 சங் 10:17 சங் 89:7 ஏசா 6:5 ஏசா 55:8 ஏசா 55:9 எபிரெ 12:28 எபிரெ 12:29 |
31 | அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். | ஆதி 18:27 மத் 7:7 மத் 7:11 லூக் 11:8 லூக் 18:1 எபே 6:18 எபிரெ 4:16 எபிரெ 10:20-22 |
32 | அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். | ஆதி 18:30 நியா 6:39 நீதி 15:8 ஏசா 42:6 ஏசா 42:7 யாக் 5:15-17 1யோவா 5:15 1யோவா 5:16 |
33 | கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான். | ஆதி 18:16 ஆதி 18:22 ஆதி 32:26 |