1சாமுவேல் 30:1-8 - WCV
1
மூன்றாம் நாள் தாவீது அவர் தம் ஆள்களும் சிக்லாவை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு: சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாவைத் தாக்கி தீக்கிரையாக்கினார்.
2
அங்கிருந்த பெண்கள் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களை கூட்டிக் கொண்டு தங்கள் வழியே சென்றனர்.
3
தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் அறிந்தார்.
4
அப்பொழுது தாவீது அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.
5
தாவீதின் இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம் பெண்ணான அபிகாயிலும்கூடச் சிறைக்கப்பட்டிருந்தனர்.
6
தாவீது மிகவும் மன வருத்தமடைந்தார்: வீரர் அனைவரும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால் தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமைப் பெற்றிருந்தார்.
7
பின்பு தாவீது, அகிமலக்கின் மகன் அபயத்தாரிடம்ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்! என்று கூறவே அபியத்தார்ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார்.
8
அப்பொழுது தாவீது, “நான் கொள்ளைக் கூட்டத்தாரைப் பின் தொடரட்டுமா? நான் வெற்றி கொள்வேனா? என்று ஆண்டவரிடம் வினவினார். அதற்கு அவர் பின்தொடர்! நீ வெற்றியடைவது உறுதி! என்று பதிலளித்தார்.