1சாமுவேல் 26:21-25 - WCV
21
அப்பொழுது சவுல் நான் பாவம் செய்துள்ளேன் என் மகன் தாவீதே! திரும்பி வா, என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி நான் உனக்கு எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன் என்றார்.
22
தாவீது மறுமொழியாக, “அரசே உம் ஈட்டி இதோ உள்ளது: இளைஞரில் ஒருவன் வந்து இப்போது அதைக் கொண்டு போகட்டும்.
23
அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை ஒப்புவித்து ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை.
24
இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது, போல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக! என்றார்.
25
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, என் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பலக் காரியங்களை செய்வாய்: அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்! என்று வாழ்த்தினார். பின்னர் தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார்.