ஆதலால் இப்பொழுது அரசராகிய என் தலைவர் அடியானின் வார்த்தைகளைக் கேட்பாராக! ஆண்டவர் உம்மை எதிராக ஏவி விட்டிருப்பின், அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்: மனிதர்க்ள அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுக! ஏனெனில் நீ சென்று வேற்றுத் தெய்வங்களை வழிப்படு என்று அவர்கள் கூறி நான் ஆண்டவருடைய உரிமையில் பங்கு பெருவதிலிருந்து என்னைத் துரத்திவிட்டார்.