18
மீண்டும் அவர், “என் தலைவராகிய நீர் உம் அடியனைப் இப்படிப் பின் தொடர்ந்து வருவது ஏன்? நான் என்ன செய்தேன்? என்னிடமுள்ள குற்றம் தான் என்ன?
19
ஆதலால் இப்பொழுது அரசராகிய என் தலைவர் அடியானின் வார்த்தைகளைக் கேட்பாராக! ஆண்டவர் உம்மை எதிராக ஏவி விட்டிருப்பின், அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்: மனிதர்க்ள அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுக! ஏனெனில் நீ சென்று வேற்றுத் தெய்வங்களை வழிப்படு என்று அவர்கள் கூறி நான் ஆண்டவருடைய உரிமையில் பங்கு பெருவதிலிருந்து என்னைத் துரத்திவிட்டார்.
20
ஆதலால் ஆண்டவர் திருமுன்னிலைக்கு வெகு தொலைவில் உள்ள நிலத்தில் என் இரத்தம் சிந்தப்படாதிருக்கட்டும்! ஏனெனில் மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல் இஸ்ரயேலின் அரசர் ஒரு தொள்ளுப்பூச்சியைத் தேடி வந்துள்ளார் “என்றார்.
21
அப்பொழுது சவுல் நான் பாவம் செய்துள்ளேன் என் மகன் தாவீதே! திரும்பி வா, என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி நான் உனக்கு எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன் என்றார்.