1சாமுவேல் 24:17-22 - WCV
17
அவர் தாவீதிடம், “நீ என்னிலும் நீதிமான். நீ எனக்கு நன்மை செய்தாய்: ஆனால் நானோ உனக்கு தீங்கு செய்தேன்.
18
ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய்.
19
ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்ட பின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!
20
இதோ, நீ எனக்கு திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்று நான் அறிகிறேன்.
21
ஆதலால் பின்வரும் என் வழிமரபை நீ வேரறுப்பதில்லை என்றும் என் தந்தை வீட்டாரிலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் ஆண்டவர் மேல் எனக்கு ஆணையிட்டுக் கூறு “ என்றார்.
22
அவ்வாறே தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கூறினார். பின்னர் சவுல் வீடு திரும்ப, தாவீதும் அவர் தம் ஆள்களும் பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்றனர்.