1சாமுவேல் 24:17-19 - WCV
17
அவர் தாவீதிடம், “நீ என்னிலும் நீதிமான். நீ எனக்கு நன்மை செய்தாய்: ஆனால் நானோ உனக்கு தீங்கு செய்தேன்.
18
ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய்.
19
ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்ட பின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!