1சாமுவேல் 23:19-21 - WCV
19
பின்பு சீபியர் கிபாவிலிருந்த சவுலிடம் சென்று, “தாவீது எங்கள் பகுதியில் எசிமேனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் அல்லவா?
20
அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்: அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம் “என்று கூறினார்.
21
சவுல் அவர்களைப் பார்த்து, “நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக!