1சாமுவேல் 22:7-9 - WCV
7
சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்: ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களiயும் கொடுப்பானோ? அதனால் எங்கள் எல்லோரையும் ஆயிரவர் தலைவர்களாகவும், நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியும்?
8
பின் எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்த போது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை: என்மேல் மனமிரங்கி அதை எனக்கு தெரிவிக்க உங்களில் ஒருவனும் வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கு எதிராகத் தூண்டிவிட்டான் என்றான்.
9
அப்பபொழுது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, “நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்.