13
அதற்கு அகிமெலக்கு அரசரிடம், “உம் பணியாளர் அனைவரும் தாவீதைப் போல் உண்மையுள்ளவன் யார்? அரசராகிய உமக்கு மருமகனும் மெய்காப்பாஅரசர் தளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டரையே மேன்மைப் பெற்றவர் அன்றோ?
14
அவனுக்காக நான் கடவுலின் திருவுள்ளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடைவையா? இல்லை.
15
அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்: ஏனெனில் உம் பிணயாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது “என்று பதிலளித்தார்.
16
அரசர் அவரிடம் அகிமெலக்கு நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும் “என்றார்.
17
அரசர் தம்மைச் சூழந்து நின்ற காவலர்களிடம், “நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்: ஏனெனில் அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்கு அறிவிக்கவில்லை.
18
அப்போது அரசர் தோயோகிடம், “நீ சென்ற தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து “, என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயோகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினார். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.
19
மேலும் அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றை வாளுக்கு இரையாக்கினார்.
20
ஆனால் அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.
21
ஆண்டவரின் குருக்களை சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.
22
தாவீது அபியத்தாரிடம், “ ஏதோமியன் தோயோகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிவித்திருந்தேன்: உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்!
23
என்னோடு தங்கு! அஞ்சாதே! என் உயிரைப் பறிக்கத் தேடுவான்: ஆனால் என்னோடு நீ இருந்தால் பாதுகாப்புடன்இருப்பாய்” என்றார்.