30
அப்பொழுது யோனத்தான் மீது சவுல் கடும் சினமுற்று அவரைப் பார்த்து, “பொய்யும் புரட்டும் நிறைந்த பெண்ணின் மகன் நீ. நீ உனக்கு மானங்கெட்ட தாய்க்கும் அவமானமாய் இருக்கும்படி நீ ஈசாயின் மகன் மீது அன்புக் கொண்டுள்ளாய் என்பதை நான் அறியேனோ?
31
ஈசாயின் மகன் உயிரோடு வாழும் வரை நீயும் நிலைத்துயிருக்கமாட்டாய்.: உன் ஆட்சியும் நிலை பெறாது: ஆதலால் ஆளனுப்பி அவனை என்னிடம் கொண்டு வா: அவன் சாகவே வேண்டும் “என்றார்.
32
அப்பொழுது யோனத்தான் தம் தந்தை சவுலிடம், “அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன செய்தான் என்று கேட்டார்.
33
ஆனால் அவரைக் குத்தி வீழ்த்த எண்ணி அவரை நோக்கி தம் ஈட்டியை எறிந்தார்: ஆதலால் தாவீதை கொன்று விட தம் தந்தை முடிவு எடுத்துவிட்டார்என்று யோனத்தான் அறிந்து கொண்டார்.
34
உடனே யோனத்தான் வெஞ்சினமுற்று பந்நியைவிட்டு எழுந்துவிட்டார். அமாவாசையின் மறுநாளகிய அன்று அவர் உணவு அருந்தவில்லை. ஏனெனில் தன் தந்தை இழிவுப்படுத்தியது குறித்து அவர் மிகவும் மனம் வருந்தினார்.