6
சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார். அதனால் சவுல் ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான் “ எ”னறார்.
7
பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார். மேலும் யோனத்தான் தாவீதை சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே சவுல் அவரது பணியில் ஈடுபட்டார்.
8
மீண்டும் போர் மூண்டது: தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்கிளல் மிகுதியனோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினர்.
9
பின்னர் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார்.
10
அப்போது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு குத்த முயன்றார். ஆனால் சவுலின் ஈட்டி குறியிலிருந்து விலகியதனால் சுவரில் பாய்ந்தது. அன்றிரவேதாவீது அங்கிருந்து தப்பி ஓடினார்.
11
உடனே சவுல் தாவீதை அவர் வீட்டில் கண்காணித்து மறுநாள் காலையில் கொன்றுவிடுமாறு காவலர்களை அனுப்பினர். ஆனால் தாவீதின் மனைவி மீக்கால் அவரிடம், “நீர் இன்றிரவே உம் உயிலைக் காப்பற்றிக் கொள்ளவிட்டால் நாளை நீர் கொள்ளப்படுவீர் என்றாள்.