7
அப்பெண்பள் அப்படி ஆடிப்பாடுகையில் சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார். என்று பாடினார்.
8
இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை: அவர் மிகவும் சினமுற்று, “அவர்கள் தாவீதுக்குப் பதினாயிரம் பேர் என்றனர். எனக்கோ, ஆயிரம் பேர் என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்! “என்று கூறினார்.
9
அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கொண்டு பார்க்கலானார்.
10
மறுநாளே கடவுல் அனுப்பிய தீய ஆவி சவுலை ஆட்கொள்ள, அவர் தம் வீட்டில் பிதற்றினார். அப்போது தாவீது ஒவ்வொரு நாளும் செய்வது போல் யாழ் எடுத்து மீட்டினார். சவுலின் கையில் ஈட்டி இருந்தது.
11
நான் தாவீதை சுவரோடு சேர்த்துக் குத்துவேன் என்று சவுல் நினைத்துத் தம் ஈட்டியை அவர் மேல் எறிந்தார். ஆனால் தாவீது அதை இருமுறை தவிர்த்து விட்டார்.