1சாமுவேல் 17:8-11 - WCV
8
அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில் நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும்.
9
அவன் என்னிடம் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்: நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிடைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும் “என்றான்.
10
மேலும் அந்தப் பெலிஸ்தியன், இதோ, இஸ்ரயேல் படைகளுக்கு சவால் விடுகிறேன். என்னோடு போரிட இப்பொழுதே ஒருவனை அனுப்புங்கள் “ என்றான்.
11
சவுலும் இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கலங்கிப் பெரிதும் அச்சமுற்றனர்.