21
ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர் “என்றார்.
22
அப்பொது சாமுவேல் கூறியது: “ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள் பிற பலிகள் வெலுத்துவதா? அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா? கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது!
23
கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலை வழிப்பாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையை புறங்ணித்தீர்! அவரும் உம்மை அரசப் பதவியினின்று நீக்கிவிட்டார்.