1சாமுவேல் 14:24-45 - WCV
24
பின்பு நாட்டின் மக்கள் அனைவரும் ஒரு காட்டினுள் வந்தனர். அங்கே தரையில் தேன் காணப்பட்டது.
25
மக்கள் காட்டினுள் நுழையும் போது தேன் ஒழுகிக் கொண்டிருந்தது. ஆனால் எவனும் தன் வாயில் தன் கையை வைக்கவில்லை. ஏனெனில் மக்கள் சாபத்திற்கு அஞ்சினார்கள்.
26
ஆனால், தன் தந்தை மக்களுக்கு ஆணையிட்டுச் சொன்னதை யோனத்தான் கேள்விப் படவில்லை. ஆகவே அவர் தம் கையிலிருந்த கோலை நீட்டி, அதன் நுனியில் தேன் கூட்டைக் குத்தி, கையில் எடுத்ததைத் தன் வாயில் வைத்தார். அவர் கண்கள் தெளிவடைந்தன.
27
அதற்கு வீரர்களுள் ஒருவர் கூறியது: “இன்றைக்கு உணவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என்று உம் தந்தை உறுதியாக ஆணையிட்டார். மக்களும் சேர்ந்துள்ளார்கள்.
28
அபபோது யோனத்தான், “என் தந்தை நாட்டைக் குழப்புகிறார். பாருங்கள்: நான் சிறிதளவு தேனைச் சுவைத்தேன். இப்போது என் கண்கள் தெளிவடைந்துள்ளன. இன்று மக்கள் தங்களுக்குக் கிடைத்த பொருள்களை நன்றாக உண்டிருந்தால், பெலிஸ்தியருக்கு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும் “ என்றார்.
29
அன்று வீரர்கள் பெலிஸ்தியரை மிக்காசு முதல் அய்யலோன்வரை முறியடித்தனர். எனவே அவர்கள் மிகவும் சோற்வுற்றிருந்தார்கள்.
30
அப்போது வீரர்கள் கொள்ளைப் பொருள்கள் மேல் பாய்ந்து ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை இரத்ததோடே உண்டார்கள்.
31
வீரர்கள் இரத்தத்தோடு உண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலிடம் அறிவிக்கப்பட்டது. அதற்குச் சவுல் நீங்கள் வஞ்சித்து விட்டீர்கள்” இப்போதே ஒரு பெரும் கல்லை என்னிடம் உருட்டிக் கொண்டு வாருங்கள் என்றார்.
32
மேலும் சவுல் கூறியது: நீங்கள் வீரர்கிளடையே சென்று, “ஒவ்வொருவனும் தன் மாட்டையோ ஆட்டையோ என்னிடம் கொண்டு வந்து இங்கே அடித்துச் சாப்பிடட்டும்.
33
இரத்தத்தோடு உண்ட ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்ய வேண்டாம் “ எனச் சொல்லுங்கள் “, ஆகவே ஒவ்வொருவனும் அன்று இரவே தன் மாட்டைக் கொண்டு வந்து அங்கே அடித்தான்.
34
சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார். அதுவே அவர் ஆண்டவருக்கு எழுப்பிய முதல் பலிபீடம்.
35
அதற்கு பின் சவுல் “இரவில் பெலிஸ்தியரைக் பிக் தொடர்ந்து சென்று விடியற் காலை அவர் அவர்களைக் கொள்ளையடிப்போம்.
36
அவர்களுள் ஒருவரையும் விட மாட்டோம் என்றார். அதற்கு வீரர்கள், “உமக்கு நல்லதெனப் பட்டத்தைச் செய்யுங்கள். குருக்களோ, “நாம் இங்கே கடவுளை அனுகுவோம் “என்றார்கள்.
37
சவுல் கடவுளை நோக்கி, “நான் பெலிஸ்தியரைப் பின் தொடரலாமா? அவர்களை இஸ்ரயேலிடம் ஒப்படைப்பீரோ? என்று கேட்டார்.
38
ஆனால் அன்று அவர் மறுமொழி கூறவில்லை.எனவே சவுல், “வீரர்கள் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்: இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கவனியுங்கள்.
39
இஸ்ரயேலை விடுவிக்கும் ஆண்டவர் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குக் காரணமாக மகன் யோனத்தான் இருந்தாலும் அவன் கட்டாயம் சாவான் “ என்றார். எனினும் அவனும் மறுமொழி கூறவில்லை.
40
மேலும் அவர் இஸ்ரயேலர் அனைவரையும் நோக்கி, “நீங்கள் ஒருபக்கம் இருங்கள். என் மகன் யோனத்தானும் நானும் ஒரு பக்கம் இருக்கிறோம். என்று கூற வீரர்களும், “உமக்கு நலமெனத் தோன்றியதைச் செய்யும் “ என்று சவுலிடம் சொன்னார்கள்.
41
ஆகவேசவுல், இஸ்ரயேலின் கடவுலாகிய ஆண்டவரே! முன் உண்iமையை வெளிப்படுத்தும் என்று மன்றாட, யோனத்தான் மீதும் சீட்டு விழுந்தது: வீரர்களோ தப்பினர்.
42
பிறகு சவுல், “எனக்கும் என் மகன் யோனத்தானுக்கும் இடையே சீட்டு போடுங்கள், எனச் சொல்ல, யோனத்தான்மீது சீட்டு விழுந்தது.
43
சவுல் யோனத்தானை நோக்கி நீ என்ன செய்தாய்? சொல் “ என வினவ, அதற்கு யோனத்தான், “என் கையில் இருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்து சுவைத்தேன். இதோ நான் சாகத் தயார் “ என்று கூறினார்.
44
அதற்குச் சவுல், யோனத்தான் நீ சாகத்தான் வேண்டும். இல்லையேல் கடவுள் எனக்கு அப்படியே செய்யட்டும்: அதற்கு மேலும் செய்யட்டும் என்றார்.
45
ஆனால் மக்கள் சவுலை நோக்கி, “இஸ்ரயேலுக்காக இவ்வளவு பெரிய விடுதலையைக் கொணர்ந்த யோனத்தான் சாகலாமா? அது கூடவே கூடாது! ஆண்டவர் மேல் ஆணை! அவர் தலையிலிருந்து ஒரு முடி தரையில் விழக்கூடாது. ஏனெனில் கடவுளின் கருணையோடுத்தான் இன்று அவர் செயல்பட்டார். என்றார்க்ள. இவ்வாறு வீரர்கள் அவரை சாவினின்று தப்புவித்தார்கள்.