1சாமுவேல் 11:1-3 - WCV
1
அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபோசை முற்றுக்கையிட்டான். யாபோசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, “எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உங்களுக்கு பணிந்திருப்போம். என்றனர்.
2
அம்மோனியன் நாகாசு அவர்களை நோக்கி, “நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை: உங்களுக்குள் எவ்வொருவனின் வலக் கண்ணும் பிடுங்கிடும். இஸ்ரயேலர் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்குவேன் என்றான்.
3
யாபேசின் பெரியோர்அவனிடம் கூறியது: “ஏழு நாள்கள் எங்களுக்கு தவணை தாரும். நாங்கள் இஸ்ரயேல் எல்லை முழுவதும் தூதர்களை அனுப்புவோம். எங்களை மீட்பர் எவரும் இல்iயெனில் நாங்கள் உங்களிடம் சரணடைவோம்.