1சாமுவேல் 10:21-27 - WCV
21
பென்யமின் புலத்ததை அதன் குடும்பங்கள் வாரியாக ஒருங்கே கொண்டு வர, மதிரி குடும்பத்தின் மீது சீட்டு விழுந்தது. அவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை.
22
“ஆள் இங்கே வந்துவிட்டானா? என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் ஆம்! அவன் பொருட்குவியலிடையே ஒளிந்துள்ளேன் “ என்று கூறினார்.
23
அவர்கள் ஓடிச் சென்று அங்கிருந்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மக்கள் நடுவே நின்ற போது அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அவர் அனைவரும் தோளுயரமே இருந்தார்கள்.
24
சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி, ஆண்டவர் தேர்ந்தெடுத்ததைப் பாருங்கள். மக்கள் அவரைப்போல் வேறொருவரும். உண்டா? என்றார். அப்போது மக்கள் அனைவரும் “அரசர் நீடூழி வாழ்க! “ என்று ஆர்பரித்தார்.
25
சாமுவேல் அரசரின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து, அவை ஓர் ஏட்டில் எழுதி, ஆண்டவர் திருமுன் வைத்தார். பிறகு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்.
26
சவுலும் கிபியாவிலிருந்த தம் வீட்டிற்குச் சென்றார். கடவுளால் தூண்டப்பட்ட வீரர்கள் அவரோடு சென்றார்கள்.
27
ஆனால் தீயோர் சிலர், “இவன் நம்மை எவ்வாறு மீட்க முடியும்? “ என்று கூறி, அவரைப் புறக்கணித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு எதுவும் தரவில்லை. அவரோ அமைதியாக இருந்தார்”.