21
பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்: “பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்: நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுவாய்.
22
யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது: தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்: எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது.
23
விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது: மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது: ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்: உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றிவிட்டது.
24
இறைவாக்கினர்கள், இறைமக்களின் இரத்தக்கறையும், ஏன், மண்ணுலகில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தக்கறையுமே அவளிடம் காணப்பட்டது.”