17
பெகோரில் நாம் செய்த பாவம் நமக்குப் போதாதா? இந்நாள் வரை நாம் அதற்குக் கழுவாய் தேடவில்லை.அதற்குரிய தண்டனை ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்புக்குக் கிடைத்துவிட்டது.
18
நீங்கள் இன்று ஆண்டவரை விட்டு விலகிவிட்டீர்கள்.இன்று நீங்கள் ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றீர்கள்.நாளை இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதன்மீதும் அவர் சினம்கொள்வார்.
19
உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் தூய்மையற்றதாயின் ஆண்டவருக்கு உரிய நிலத்திற்கு வாருங்கள்.அங்கு ஆண்டவரின் திருஉறைவிடம் அமைந்துள்ளது.எங்கள் நடுவில் தங்குங்கள்.ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்யவேண்டாம்.நம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தை விட்டு வேறொரு பலிபீடத்தைக் கட்டும் உங்கள் குற்றத்திற்கு எங்களை ஆளாக்க வேண்டாம்.
20
செராகின் மகன் ஆக்கான் கொள்ளைப் பொருளைத் திருடியதால் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதன்மீதும் அவர் சினம் கொள்ளவில்லையா? தன் குற்றத்திற்காக அவன் ஒருவன் மட்டுமா அழிந்தான்?”