யோசுவா 10:22-26 - WCV
22
யோசுவா,”குகையின் வாயிலைத் திறந்து, அந்த ஐந்து மன்னர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார்.
23
அவர்கள் அவ்வாறே செய்தனர்: எருசலேம், எபிரோன், யார்முத்து, இலாக்கிசு, எக்லோன் ஆகிய நகர்களின் ஐந்து மன்னர்களையும் குகையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
24
அவர்கள் அந்த மன்னர்களை யோசுவாவிடம் கொண்டு வந்தபொழுது, யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் ஒருங்கே அழைத்து, அவருடன் சென்ற போர்த் தலைவர்களிடம்,”அருகில் சென்று உங்கள் பாதங்களை இம்மன்னர்களின் கழுத்தின்மீது வையுங்கள்” என்றார்.அவர்கள் நெருங்கி வந்து தங்கள் பாதங்களை அவர்கள் கழுத்தின்மீது வைத்தனர்.
25
யோசுவா அவர்களிடம்,”அஞ்சாதீர்கள்: கலங்காதீர்கள்: திடமும் துணிவும் கொண்டிருங்கள்.ஏனெனில் ஆண்டவர் நீங்கள் போரிடும் எதிரிகள் அனைவருக்கும் இவ்வாறே செய்வார்” என்றார்.
26
அதற்குப்பின் யோசுவா அந்த ஐந்து மன்னர்களை வாளால் வெட்டிக் கொன்றார்.அவர்களின் சடலங்களை ஐந்து மரங்களில் மாலைவரை தொங்கவிட்டார்.