யாக்கோபு 4:1-5 - WCV
1
உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா?
2
நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்: போராசை கொள்கிறீர்கள்: அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை.
3
நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நிங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்: சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.
4
விபசாரர் போல செயல்படுவோரே, உலகத்தோடு நட்புக்கொள்வது கடவுளைப் பகைப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார்.
5
அல்லது “மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார். அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது என மறைநூல் சொல்வது வீணென நினைக்கிறீர்களா?