யாக்கோபு 2:8-11 - WCV
8
“உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!” என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது.
9
மாறாக, நீங்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்: நீங்கள் குற்றவாளிகளென அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.
10
ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினாலும் அவர் அனைத்தையும் மீறிய குற்றத்துக்குள்ளாவார்.
11
ஏனெனில் “விபசாரம் செய்யாதே” என்று கூறியவர் “கொலை செய்யாதே” என்றும் கூறியுள்ளார். நீங்கள் விபசாரம் செய்யாவிட்டாலும் கொலை செய்வீர்களென்றால் சட்டத்தை மீறியவர்களாவீர்கள்.