எபிரெயர் 11:36-38 - WCV
36
வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்: விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர்.
37
சிலர் கல்லெறிபட்டனர்: இரண்டாக அறுக்கப்பட்டனர்: வாளுக்கு இரையாகி மடிந்தனர்: செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்: வறுமையுற்று வாடினர்: துன்புறுத்தப்பட்டனர்: கொடுமைக்கு உள்ளாயினர்.
38
அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலை வெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.