17
அவர்களது போதனை சதையழுகல் நோய் போன்று அரித்துத் தின்றுவிடும். இமனேயும் பிலேத்தும் இத்தகையோராவர்.
18
உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டதென்று அவர்கள் சொல்லி, உண்மையை விட்டு விலகிப் போய் விட்டார்கள்: சிலருடைய நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டார்கள்.
19
கடவுள் இட்ட அடித்தளம் உறுதியாய் நிலைத்து நிற்கிறது. அதில் “ஆண்டவர் தம்முடையோரை அறிவார்” என்றும், “ஆண்டவரின் பெயரை அறிக்கையிடுவோர் அநீதியை விட்டு விட வேண்டும்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.