3
எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். ஏனெனில் இறைவனுக்கு எதிரான கிளர்ச்சி முதலில் வந்தே தீரும். பின்னர், நெறிக்கெட்ட மனிதன் வெளிப்பட வேண்டும். அவன் அழிவுக்குரியவன்.
4
தெய்வம் என வழங்கப்படுவதையும் வழிபாட்டுக்குரிய அனைத்தையும் எதிர்த்து, அவற்றுக்கு மேலாகத் தன்னை அவன் உயர்த்திக் கொள்வான். அதோடு கடவுளின் கோவிலில் அமர்ந்து கொண்டு, தன்னைக் கடவுளாகவும் காட்டிக் கொள்வான்.
5
நான் உங்களோடு இருந்தபொழுதே இவற்றைச் சொல்லிவந்தேன் என்பது உங்களுக்கு நினைவில்லையா?
6
அவனுக்குக் குறித்த காலம் வருமுன் அவன் வெளிப்படாதபடி, இப்பொழுது அவனைத் தடுத்து வைத்திருப்பது எதுவென்பது உங்களுக்குத் தெரியுமே!
7
நெறிகேட்டை விளைவிக்கும் ஆற்றல் ஏற்கெனவே மறைவாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதை இதுவரை தடுத்து வைத்திருப்பது அகற்றப்படும் வரை, அது இப்படியே செயலாற்றிக் கொண்டிருக்கும்.