1தெசலோனிக்கேயர் 2:14-16 - WCV
14
சகோதர சகோதரிகளே! இயேசு கிறிஸ்துவின் உறவில் யூதேயாவில் வாழும் கடவுளின் சபைகளுக்கு நேர்ந்ததுபோலவே உங்களுக்கும் நேர்ந்தது. யூதர்களால் அவர்கள் துன்புறுத்தப்பட்டதுபோலவே நீங்களும் உங்கள் சொந்த இனத்தாரால் துன்புறுத்தப்பட்டீர்கள்.
15
அந்த யூதரே ஆண்டவராகிய இயேசுவையும் இறைவாக்கினரையும் கொன்றார்கள். எங்களையும் துரத்திவிட்டார்கள். அவர்கள் கடவுளுக்கு உகந்தவர்கள் அல்ல: மனித இனத்திற்கே எதிரிகள்.
16
ஏனெனில், பிற இனத்தார் மீட்புப் பெறுமாறு நாங்கள் அவர்களிடம் பேசுவதைத் தடுக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களை என்றும் பெருக்கிக் கொண்டே போகிறார்கள். இறுதியில் கடவுளின் சினம் அவர்கள் மேல் வந்துவிட்டது.