4
உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரைவிட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும்.
5
நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்: இஸ்ரயேல் இனத்தவன்: பென்யமின் குலத்தவன்: எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்: திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்.
6
திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன்.