பிலிப்பியர் 3:1-3 - WCV
1
இறுதியாக, என் சகோதர சகோதரிகளே, ஆண்டவரோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடையுங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்குத் தொல்லையாயில்லை: உங்கள் நன்மைக்காகவே எழுதுகிறேன்.
2
அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்: அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். “உறுப்பு சிதைப்போரைக்” குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
3
ஏனெனில், உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்.