பிலிப்பியர் 1:15-18 - WCV
15
சிலர் பொறாமையும் போட்டி மனப்பான்மையும் கொண்டு கிறிஸ்துவை அறிவிக்கின்றனர்: வேறுசிலர் நன்மனத்தோடு அறிவிக்கின்றனர்.
16
இவர்களைத் தூண்டுவது அன்பே. நற்செய்திக்காகக் குரல்கொடுக்கவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என இவர்கள் அறிவார்கள்.
17
மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் தூண்டப்பட்டுக் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர். அவர்களது நோக்கம் தூய்மையானது அல்ல: அவர்கள் என் சிறைவாழ்வின் துன்பத்தை மிகுதியாக்கவே நினைக்கின்றனர்.
18
அதனாலென்ன? அவர்களது நோக்கம் போலியாக அல்லது உண்மையாக இருக்கலாம். எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன்.