கலாத்தியர் 4:26-29 - WCV
26
மேலே உள்ள எருசலேமோ உரிமைப்பெண்: நமக்கு அன்னை.
27
ஏனெனில், “பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு! பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு! ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்” என்று மறைநூலில் எழுதியுள்ளது.
28
ஆகவே சகோதர சகோதரிகளே, நீங்களும் ஈசாக்கைப்போல வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகள்.
29
ஆனால் இயல்பான முறைப்படி பிறந்தவன் தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தவனை அன்று துன்புறுத்தியவாறே இன்றும் நடக்கிறது.