23
அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களைவிடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்: பன்முறை சிறையில் அடைபட்டேன்: கொடுமையாய் அடிபட்டேன்: பன்முறை சாவின் வாயிலில் நின்றேன்.
24
ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள்.
25
மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்: ஒருமுறை கல்லெறிபட்டேன்: மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்: ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன்.