2கொரிந்தியர் 11:21-23 - WCV
21
இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே! இது அவமானத்திற்குரிய ஒன்றுதான்! அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமைப்பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன்.
22
அவர்கள் எபிரேயரா? நானும் தான்: அவர்கள் இஸ்ரயேலரா? நானும் தான்: அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும் தான்.
23
அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களைவிடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்: பன்முறை சிறையில் அடைபட்டேன்: கொடுமையாய் அடிபட்டேன்: பன்முறை சாவின் வாயிலில் நின்றேன்.