3
ஆனால் இறைவாக்கு உரைப்பவரோ மக்களிடமே பேசுகிறார். அவர் பேசுவது அவர்களுக்கு வளர்ச்சியையும் ஊக்கத்தையும் ஆறுதலையும் அளிக்கிறது.
4
பரவசப்பேச்சு பேசுகிறவர் தம்மை மட்டுமே வளர்ச்சியுறச் செய்கிறார். ஆனால் இறைவாக்குரைப்பவர் திருச்சபையை வளர்ச்சியுறச் செய்கிறார்.
5
நீங்கள் அனைவரும் பரவசப்பேச்சு பேசுவதை நான் விரும்புகிறேன். ஆனாலும் நீங்கள் இறைவாக்குரைப்பதையே நான் அதிகமாக விரும்புகிறேன். பரவசப்பேச்சு பேசுகிறவர் திருச்சபையைக் கட்டியெழுப்பும் நோக்குடன் தாம் பேசுவதை விளக்க வேண்டும். இல்லையெனில் பரவசப்பேச்சு பேசுபவரைவிட இறைவாக்குரைப்பவரே மேலானவர்.
6
எனவே சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வந்து திருவெளிப்பாடு, மெய்யறிவு, இறைவாக்கு, போதனை இவற்றில் எதைக் குறித்தும் பேசாமல், பரவசப் பேச்சை மட்டும் பேசினால், என்னால் நீங்கள் அடையும் பயனென்ன?